தேர்வை கண்டு அச்சம் வேண்டாம்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி டிப்ஸ் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்வை கண்டு அச்சம் வேண்டாம்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி 'டிப்ஸ் '

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 07, 2021 | கருத்துகள் (40)
Share
புதுடில்லி: பயமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேர்வு குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.நடப்பு ஆண்டில் மாணவர்களுடனான
தேர்வு, பிரதமர் மோடி, டிப்ஸ்

புதுடில்லி: பயமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேர்வு குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
நடப்பு ஆண்டில் மாணவர்களுடனான கலந்துரையாடல் 'ஆன்லைன்' வாயிலாக இன்று ( ஏப். 07) துவங்கியது.. தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பெற்றோர் என 14 லட்சம் பேர் 'பரிக் ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.


latest tamil news



81 நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது,
உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்களை நேரில் சந்திக்காதது எனக்கு மிகப்பெரிய இழப்பு .பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகவும் திகழ வேண்டும். தேர்வு குறித்து சில நேரங்களில் பள்ளிகளும் பெற்றோர்களும் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.தேர்வை கண்டு பயம் வேண்டாம். மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள். இதற்கு முதலில் கடினமான கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள்.

தேர்வுக்கான நேரத்தை சரிபாதியாக எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து பாடங்களுக்கும் கவனம் செலுத்துங்கள்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டு கோலாக இருக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தை போக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால் தான் அவர்களின் தன்னம்பிக்கை வளரும். மாணவர்களுக்கு பொது தேர்வு ஒன்றும் இறுதி கட்ட வாழ்க்கை இல்லை. தற்போதைய பெற்றோர்கள் தேர்வு முடிவுகளை வைத்து குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் என முடிவெடுக்கிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X