பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சென்னையின் மதிப்பு குறைகிறது!

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:

தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த தேர்தல் மட்டுமின்றி, இதற்கு முன் நடந்த தேர்தல்களிலும், அங்கு ஓட்டுப்பதிவு சதவீதம் மிகக் குறைந்தே காணப்படுகிறது.

இந்த தேர்தலில், துறைமுகம் தொகுதியில், வாக்காளர் அட்டை இருந்தும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருந்த பட்டியலில் பெயர் இல்லாததால், 7,000 பேர் ஓட்டளிக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர்;பலருக்கு, 'பூத் ஸ்லிப்' கொடுக்கப்படவில்லை. இதன் மூலம், தேர்தலுக்கு முன் எடுக்கப்படும், 'சென்சஸ்' சென்னையில் சரியாக எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.


latest tamil news


வரும் தேர்தல்களில், இது போன்ற குறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.சென்னை மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையோ எனத் தோன்றுகிறது. அதனால், ஓட்டுப்போடாத நபரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; அரசு வழங்கும் சலுகை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.எந்த தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நிகழ்கிறதோ, அப்போது தான், பூரண ஜனநாயகம் என்ற அற்புத நிலையை அடைய முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-ஏப்-202119:29:51 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சுமார் 60 வருடங்களாகவே சென்னையில் வாக்குப் பதிவு குறைவே. காரணம் சென்னையின் வாக்காளர் பட்டியலில் இருப்பவர் பெயர் அவர்கள் ஊரிலும் உள்ளது. அங்கு வாக்களிக்கப் போய்விடுவர். ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலுடன் இணைத்தால் 30 சதவீதப் போலிப் பெயர்கள் நீங்கிவிடும்
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் நகரத்தில் குடி நீர் வழங்கல் கழிவுநீர் அகற்றுதல் வீட்டுக் காவல்காரர் மருத்துவசேவை போக்குவரத்து இவ்வாறாக ஒவ்வொன்றுக்கும் நமக்குநாமே பணம் கொடுத்து ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்ற நிலைதான் உள்ளது அரசாங்கம் எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை ஒரு குடியிருப்பு கட்ட அனுமதி கேட்டால் குடி நீர் வழங்கல் கழிவுநீர் அகற்றுதல் நகர்மன்றம் ஏற்பதில்லை தங்கள் பொறுப்பே என்று "ஆணை" வழங்குகிறார்கள் நாம் 100 % ஒட்டு போட வேண்டுமென்றும் காசு வாங்க கூடாதென்றும் சொல்லிவிட்டு வேட்பாளர் யாருக்கும் தகுதியில்லையென நோட்டா போட வசதி வேண்டுமென்றும் படித்த அதிமேதாவிகள்தானே கேட்டார்கள் அவர்கள் என் நோட்டாவாவது போடவில்லை? அதுதான் புதிர் விட்ருவோம்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஏப்-202123:09:19 IST Report Abuse
Pugazh V பத்து ஆண்டுகள் அதிமுக எடபாடி அரசு நன்றாக நடந்தது என்றார்கள். இப்போது ஒருத்தர் ரவுடியிசம் அதிகம் என்கிறார்? அப்ப பத்து வருஷமா எடபாடி என்ன புடுங்கிண்டு இருந்தார்? அப்படின்னா பத்து வருஷம் தண்டசாம்ப்ராணி ஆட்சி ன்னு ஒரு வாசகர் நீண்ட கட்டுரை எளுதி ஒத்துண்டுட்டர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X