இது உங்கள் இடம்: சென்னையின் மதிப்பு குறைகிறது!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சென்னையின் மதிப்பு குறைகிறது!

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (76)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:

தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த தேர்தல் மட்டுமின்றி, இதற்கு முன் நடந்த தேர்தல்களிலும், அங்கு ஓட்டுப்பதிவு சதவீதம் மிகக் குறைந்தே காணப்படுகிறது.

இந்த தேர்தலில், துறைமுகம் தொகுதியில், வாக்காளர் அட்டை இருந்தும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருந்த பட்டியலில் பெயர் இல்லாததால், 7,000 பேர் ஓட்டளிக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர்;பலருக்கு, 'பூத் ஸ்லிப்' கொடுக்கப்படவில்லை. இதன் மூலம், தேர்தலுக்கு முன் எடுக்கப்படும், 'சென்சஸ்' சென்னையில் சரியாக எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.


latest tamil news


வரும் தேர்தல்களில், இது போன்ற குறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.சென்னை மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையோ எனத் தோன்றுகிறது. அதனால், ஓட்டுப்போடாத நபரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; அரசு வழங்கும் சலுகை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.எந்த தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நிகழ்கிறதோ, அப்போது தான், பூரண ஜனநாயகம் என்ற அற்புத நிலையை அடைய முடியும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X