சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவக பலகை சூறை: மீண்டும் அதே இடத்தில் வைக்க ஸ்டாலின் உத்தரவு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (177)
Share
Advertisement
சென்னையில் மதுரவாயில் பகுதியில் அம்மா உணவகம் பலகை, திமுகவினரால் சூறையாடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் அம்மா உணவக பலகையை வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.திமுக வெற்றி செய்தி வந்ததும் சென்னை 19 வது வட்டத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்திய அம்மா உணவகம் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயக்குமார்

சென்னையில் மதுரவாயில் பகுதியில் அம்மா உணவகம் பலகை, திமுகவினரால் சூறையாடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் அம்மா உணவக பலகையை வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

திமுக வெற்றி செய்தி வந்ததும் சென்னை 19 வது வட்டத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்திய அம்மா உணவகம் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



latest tamil news




ஜெயக்குமார் கண்டனம்


இந்த சம்பவத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூறையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.


latest tamil news




திமுகவினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்


இதற்கிடையில் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மதுரவாயில் அம்மா உணவகம் பெயர்ப்பலகையை உடைத்த 2 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்க திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், உணவக பெயர்ப்பலகை அதே இடத்தில் வைக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மா சுப்பிரமணியன் எம்எல்ஏ தகவல் தெரிவித்துள்ளார்.


latest tamil news




ஸ்டாலின் வேண்டுகோள்


திமுக தொண்டர்கள் யாரும் பெயருக்கு களங்கம் ஏற்படும்படி நடந்து கொள்ள வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார். மேலும் பெண் தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து உண்டியலில் போட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. யாரும் தங்கள் உடலை வருத்தி காணிக்கை என்ற பெயரில் ஈடுபட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இருவர் கைது



இந்த சம்பவம்தொடர்பாக தி.மு.க.,வை சேர்ந்த நவசுந்தர், சுரேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (177)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
05-மே-202114:22:52 IST Report Abuse
திராவிஷ கிருமி ரௌடிகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
05-மே-202113:18:15 IST Report Abuse
S.Ganesan போர்டு திருப்பி வைத்தது, கட்சியில் இருந்து நீக்கியது எல்லாமே சும்மா கண் துடைப்புதான்.ஊரை ஏமாற்றும் வேலை. பதவி ஏற்றவுடன் மீண்டும் வேதாளங்கள் முருங்கை மரம் ஏறும்
Rate this:
Cancel
05-மே-202110:24:33 IST Report Abuse
Kalyanaraman இது ச்சும்மா ட்ரைலர்தான். பதவி ஏற்பு முடிஞ்சதும் எல்லாரையும் அலற விடுவோம் பாரு. எதை கேட்டாலும் மறுக்காம கழகக் கண்மணிகளுக்கு குடுக்கணும். இல்லேன்னா அவ்ளோதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X