சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரை புறக்கணித்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டு : கலெக்டர் மாற்றம்

Updated : ஜூலை 17, 2011 | Added : ஜூலை 15, 2011 | கருத்துகள் (105)
Share
Advertisement
ஈரோடு: தோல் தொழிற்சாலை பிரச்னையாலும், விளம்பர மோகத்தாலும் ஈரோடு கலெக்டர் மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகளும், அரசு பள்ளியிலிருந்து வெளியேறினார். சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கலெக்டராக இருந்த சவுண்டையா மாற்றப்பட்டு, மதுரை கலெக்டராக இருந்த காமராஜ், ஈரோடு கலெக்டராக, மார்ச் 20ம் தேதி

ஈரோடு: தோல் தொழிற்சாலை பிரச்னையாலும், விளம்பர மோகத்தாலும் ஈரோடு கலெக்டர் மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகளும், அரசு பள்ளியிலிருந்து வெளியேறினார்.
சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கலெக்டராக இருந்த சவுண்டையா மாற்றப்பட்டு, மதுரை கலெக்டராக இருந்த காமராஜ், ஈரோடு கலெக்டராக, மார்ச் 20ம் தேதி பொறுப்பேற்றார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், போக்குவரத்து துறை இணைச் செயலராக காமராஜ் மாற்றப்பட்டு, தர்மபுரி கலெக்டராக இருந்த ஆனந்தகுமார், ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார். கடந்த ஜூன் 3ம் தேதி, ஈரோடு கலெக்டராக பொறுப்பேற்ற ஆனந்தகுமார், எளிமையாக பழகினார். குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தன் மகள் கோபிகாவை, யூனியன் துவக்கப்பள்ளியில் சேர்த்தார். இதன் மூலம் ஒரே நாளில் மிகப்பெரிய விளம்பரம் தேடிக் கொண்டார்.
ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் தினமும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வார். மனுநீதி நாள் முகாம், ஆய்வு போன்றவற்றுக்கு செல்லும் இடங்களிலும், அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுடன் சேர்ந்து கொள்வார்.
ஜூலை 9ம் தேதி, அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம் ஆகியோர் தலைமையில், ஈரோடில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கிய நிலையில், கலெக்டருக்கு போன் வந்தது. அப்போது வெளியேறியவர், மீண்டும் கூட்டம் முடியும் போது தான் வந்தார். கூட்டத்துக்கு பின், அமைச்சர்கள் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிடச் சென்றனர். அப்போது அமைச்சர்களுடன் செல்லாமல், அந்தியூரில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட்டருந்த ஆய்வுப் பணிக்கு கலெக்டர் சென்றுவிட்டார். செல்லும் வழியில், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இது, அமைச்சர்கள் காதுக்கு எட்டியது.
ஜூலை 12ம் தேதி, கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள், தோல் தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி, மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத, 11 ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தனர். இதில், ஈரோடு, பி.பி.அக்ரஹாரம் கூட்டுறவு தோல் பதனிடும் ஆலையும் ஒன்று. இதைக் கண்டித்து, கூட்டுறவு ஆலைத் தொழிலாளர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., ஆட்சியில் ஈரோடு கூட்டுறவு நூல் பதனிடும் தொழிற்சாலை மாசு பிரச்னையால் மூடப்பட்டு, அத்தொழிற்சாலைக்கு 1.40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; 250 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அத்தொகையை செலுத்த முடியாமல் மூடிக் கிடந்த தொழிற்சாலை, அ.தி.மு.க., ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. இதே பிரச்னை, கூட்டுறவு தோல் தொழிற்சாலைக்கும் ஏற்பட்டது. இது, கலெக்டரின் நடவடிக்கைக்கு எதிராக திரும்பியது. இது குறித்தும் கலெக்டர் மீது, அரசுக்கு புகாராக சென்றது. சுயவிளம்பரம், அமைச்சரின் ஆய்வுக் கூட்டங்களில் சரி வர பங்கேற்காதது, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக பங்கேற்றது, தோல் தொழிற்சாலை பிரச்னை என, அத்தனையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் எதிரொலியாக, பதவியேற்ற 40 நாளில், ஈரோடு கலெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார். ஈரோடு முன்னாள் கலெக்டர் காமராஜ் மீண்டும் ஈரோடுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரியாவிடை பெற்றார் கலெக்டர் மகள் : ஈரோடு கலெக்டராக, ஜூன் 3ம் தேதி பொறுப்பேற்ற ஆனந்தகுமார், தன் மகள் கோபிகாவை, குமலன்குட்டையில் உள்ள யூனியன் துவக்கப்பள்ளியில் சேர்த்தார்; பலராலும் பாராட்டப்பட்டார். கல்வித் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் என, அனைவரும் பள்ளிக்கு தனி கவனம் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு, கலெக்டர் ஆனந்தகுமார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட தகவலறிந்து, கோபிகாவுடன் பழகிய சக மாணவியர், ஆசிரியைகள், தலைமை ஆசிரியைகள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தன்னுடன் படிக்கும் தோழிகளிடம், "என் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளதால், நான் விரைவில் பள்ளியை விட்டு, வேறு ஊரில், வேறு பள்ளிக்கு சென்று விடுவேன்' என, கோபிகா கூறி, பிரியாவிடை பெற்றார்.

விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு : தோல், சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுத்ததால், மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு என்ற முத்துசாமி ஆகியோர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் அனுப்பியுள்ள மனு: ஈரோடு மாவட்டத்தில், தோல், சாய, சலவை ஆலை கழிவுகளால் காவிரி ஆறு, பவானி ஆறு, காலிங்கராயன் வாய்க்கால் போன்ற நீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகளும், பொதுமக்களும் கேன்சர் மற்றும் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயமும் மக்கள் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த தோல், சாய ஆலைகளுக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மற்றும் குழுவினர், கே.கே.எஸ்.கே., உள்ளிட்ட பல தோல், சாய ஆலைகள் அனைத்து விதிமுறைகளையும் மீறி செயல்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். மேற்கண்ட அதிகாரிகளை தனது மேல்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி, தோல் ஆலை அதிபர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இது எங்களுக்கு வியப்பையும், பெரும் அதிர்ச்சியும் தந்துள்ளது. நேர்மையாக செயல்படும் அதிகாரிகள், செயல்பட இயலாத நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறோம். எனவே, தாங்கள் இதை கவனத்தில் வைத்து கலெக்டர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கிரி அனகை. சென்னை. - Chennai,இந்தியா
21-ஜூலை-201107:37:38 IST Report Abuse
கிரி அனகை. சென்னை. அப்பாவி தோல் தொழிற்சாலை தொழிலாளர்களை, கலெக்டர் அவர்களுக்கு எதிராக தூண்டி விட்டது இந்த பணம் படைத்த தோல் ஆலை உரிமையாளர். ஹைதர் அலி அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்கள் பேச்சை கேட்டு ஆட்சியரை மாற்றியது யாருடைய குற்றம்? இது ஆளும்கட்சியினரின் குறுகிய சுய நல பார்வையால் ஏற்பட்ட விபரீதம்.இலவசங்கள் ஆட்சியை நிர்ணயிக்காது என்ற கடந்த கால அனுபவத்தை கவனத்தில் கொண்டு ஆட்சி செய்தால் மக்கள் நம்பிக்கையை தக்க வைக்கலாம். நமது நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து விசயங்களிலும் தொலைநோக்கு பார்வை தேவை. இலவசங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட சாய, தோல் ஆலை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்..இந்த மாற்றம் ஏன் என்பது மக்களுக்கு தெரியும்...
Rate this:
Cancel
Karthikeyan Bala - Erode,இந்தியா
17-ஜூலை-201118:41:53 IST Report Abuse
Karthikeyan Bala இவர் மாற்றபட்டத்துக்கு உண்மையான காரணம் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை..அமைச்சருக்கு வால் பிடித்து சென்றால் நல்ல கலெக்டர் அப்படிதானே?
Rate this:
Cancel
- thiruvarur,இந்தியா
17-ஜூலை-201100:10:50 IST Report Abuse
 இது மாதிரி எங்க ஊர்லயும் ஒரு கலெக்டர் இருந்தார் அவர் பெயர் உமா சங்கர் அவரது காலத்தில் திருவாரூர் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரை திடுதிப்புவென மாற்றி விட்டார்கள் இதே நிலைமை இப்போது ஈரோடு மக்களுக்கும் வந்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X