அ.தி.மு.க., வென்று, தி.மு.க., தோல்வி அடைந்திருந்தால், இந்த கோரிக்கையை, ஸ்டாலின் கண்டிப்பாக வலியுறுத்தியிருப்பார்...

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சலுான்கள் மூடப்பட்டுள்ளன, அது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. அங்கு பணிபுரியும் அனைவருக்கும், தலா, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ அவசரத்திற்கு கூட அவர்களிடம் பணம் இல்லை.- நடிகை காயத்ரி ரகுராம்'அ.தி.மு.க., வென்று, தி.மு.க., தோல்வி அடைந்திருந்தால், இந்த கோரிக்கையை, ஸ்டாலின் கண்டிப்பாக வலியுறுத்தியிருப்பார். இப்போது என்ன செய்கிறார் என பார்ப்போம்...' என, சொல்லத்
அ.தி.மு.க., வென்று, தி.மு.க., தோல்வி அடைந்திருந்தால், இந்த கோரிக்கையை, ஸ்டாலின் கண்டிப்பாக வலியுறுத்தியிருப்பார்...

சலுான்கள் மூடப்பட்டுள்ளன, அது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. அங்கு பணிபுரியும் அனைவருக்கும், தலா, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ அவசரத்திற்கு கூட அவர்களிடம் பணம் இல்லை.
- நடிகை காயத்ரி ரகுராம்


'அ.தி.மு.க., வென்று, தி.மு.க., தோல்வி அடைந்திருந்தால், இந்த கோரிக்கையை, ஸ்டாலின் கண்டிப்பாக வலியுறுத்தியிருப்பார். இப்போது என்ன செய்கிறார் என பார்ப்போம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை.



1,212 தற்காலிக மருத்துவ செவிலியர்களை நிரந்தரம் செய்தது, அ.தி.மு.க., ஆட்சியில். அடுத்தவர்கள் உழைப்பை திருடுவது புதிதல்ல. அதற்கு சாமரம் வீசும் சங்கங்களும் புதிதல்ல. உண்மை எது என, மக்கள் முடிவு செய்யட்டும்.
- அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் சத்யன்


'அப்படியா சேதி... பதவிக்கு வரும் முன்பே, தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்றல்லவா செய்திகள் வருகின்றன...' என, சொல்லத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் சத்யன் அறிக்கை.



தேர்தல் முடிவுகளின்படி, மக்களின் தேவைகளை நாங்கள் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்பதும், மக்களின் கோரிக்கைகள் இன்னும் ஏராளமாக உள்ளன என்பதும் தெரிய வருகிறது. எனவே, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவெடுத்து விட்டோம்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்


latest tamil news




'வேறு என்ன செய்ய முடியும்... ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாகவும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகவும் மாறுவது, தமிழகத்தில் இயல்பு தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி.



தேர்தல் பிரசாரத்திலும், ஸ்டாலின் நடத்திய மக்கள் சபை கூட்டங்களிலும், கோவில் மனைகளில் குடியிருப்போரை அங்கேயே தொடர்ந்து வாழச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- கோவில் மனைகளில் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன்


'கபளீகரம் செய்ய, கோவில் நிலங்கள் தான் கிடைத்தனவா... அரசியல் கட்சிகளின் இடங்களை ஆக்கிரமியுங்களேன் பார்ப்போம். இப்படி கேட்க வெட்கமாக இல்லை...' என, காட்டமாக சொல்லத் தோன்றும் வகையில், கோவில் மனைகளில் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை.



கொங்கு மண்டலத்தில் அதிகப்படியான இடங்களில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், அடுத்த தேர்தலில், கொங்கு மண்டலம் முழுவதையும் கைப்பற்றுவோம். அதற்கான பணியை இப்போது இருந்தே துவக்குவோம்.
- கொங்கு நாடு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன்


'இதெல்லாம் பம்மாத்து. தேர்தல் நேரத்தில் இந்த வீராவேசம் எங்கே போனது...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், கொங்கு நாடு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
11-மே-202107:18:13 IST Report Abuse
மணி மனசுக்கு ரொம்ப ஹாப்பியாருக்கு.
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
09-மே-202110:38:45 IST Report Abuse
Ray முதல் அலையின்போது இதே கோரிக்கையை வைக்காத காய திரி இப்பொ மட்டும் கோருவது அரசியல் ஆதாயத்திற்காகத்தானே என்று உமக்கு கேட்க தோன்ற வில்லையா?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:37:49 IST Report Abuse
meenakshisundaram இப்போது திமுக புள்ளியே சொல்லி உள்ளார் -வேறு என்ன செய்ய ?நிலைமை கட்டுப்பாட்டில் இல்லையே ,அதனால் தான் முழு ஊரடங்கு என்று .ஆனா இப்போது மட்டும் மக்கள் தாங்குவார்களா என்பதே கேள்வி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X