அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: எப்போதும் சண்டை கோழியா?

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போலீசாரை, கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களாக அறிவித்து, போலீஸ் முதல், இன்ஸ்பெக்டர் வரையிலான, 1.17 லட்சம் பேருக்கு, தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். இந்த கொரோனா காலத்தில் கடுமையாக உழைக்கும்
DMK, CM Stalin, PM Modi


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போலீசாரை, கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களாக அறிவித்து, போலீஸ் முதல், இன்ஸ்பெக்டர் வரையிலான, 1.17 லட்சம் பேருக்கு, தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். இந்த கொரோனா காலத்தில் கடுமையாக உழைக்கும் களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டியது, அவசியமானது தான்.

சுகாதார பணியாளர்கள், செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் பணியும் முக்கியமானது. 'டாஸ்மாக்' கடை மூடப்பட்டிருப்பதால், பல ஏழை பெண்கள் தங்கள், 'குடி'கார கணவனிடம் அடி, உதை படாமல் சந்தோஷமாக இருக்கின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எப்போதும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பக் கூடியவர். அதனால், மேற்கு வங்கம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை தமிழக அரசு மறக்கக் கூடாது.


latest tamil news



மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'மத்திய அரசுடன் இணக்கமாக இருங்கள். அதனால், நம் காரியங்களை சாதித்து கொள்ள முடியும்' என, தி.மு.க., - எம்.பி.,க்களிடம் அடிக்கடி அறிவுறுத்துவார். மாநில அரசு எப்போதும் சண்டை கோழியாக இருந்து, மத்திய அரசை எதிர்ப்பதால் எந்த பயனும் இல்லை. மாநில நலனுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படும் போது, கண்டிப்பாக சுட்டிக்காட்டி, எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

ஆனால் எதற்கெடுத்தாலும், மத்திய அரசுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்தால், அது மாநிலத்தின் நலனுக்கு நல்லது இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால், அது மக்களுக்கு பல நன்மைகளை தரும்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
09-ஜூன்-202123:19:26 IST Report Abuse
jagan ஒரு வருஷத்துல ஆட்சியை கலைத்தால் போதும் திரும்பி ஜெயிக்க முடியாது. கொஞ்சம் ஆடட்டும்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202122:27:13 IST Report Abuse
Pugazh V அதென்னவோ சிலர் ஆட்சிக் கவிழ்ப்பு என்று சொல்லிப் பார்க்கிறார்கள். சிரிப்பு தான் வருகிறது. திருமதி. கனிமொழி சொன்னது தான் நினைவு வருகிறது."திமுக ஆட்சியைத் தொட்டுப்பாரு தம்பி". அப்போது தெரியும். தமிழ் நாட்டு மக்களின் பலம். இருக்கும் நாலு சீட்டும் காலியாகிவிடும். ஆட்சி கவிழ்ப்பு என்று சொன்ன சாமியே , 48 மணிநேரத்துக்குள், "நான் அப்படி சொல்லவே இல்லை" என்று பல்டி அடித்து ட்வீட் பண்ணிட்டார்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202122:22:49 IST Report Abuse
Pugazh V தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுவரை ஒன்றிய அரசுடன் சண்டை போடும் ரீதியாக ஒரு பேச்சோ அறிக்கையோ அல்லது செய்திக்குறிப்போ சொல்லவேயிவ்லை. அப்புறம் ஏன் இப்படி ஒரு இமெயில்?? என்ன சண்டை எப்போது எங்கே போட்டார்? அவர் மோடியின் டிவி பேச்சை பாராட்டி அறிக்கை தந்திருக்கிறார். அதற்கு முன்பு, கூடுதல் ஆக்சிஜன் கேட்டு கடிதம் எழுதி, ஒதுக்கீடடை விட.இருமடங்காகப் பெற்றார். தடுப்பூசிகளை அதிகம் தர வேண்டும் என்று இன்னொரு கடிதம் எழுதியிருக்கிறார். அதை தனது கட்சி எம்.பி.க்கள் மூலமாக நேரிட்டும் வலியுறுத்தியிருக்கிறார். இந்த மாதிரி சூழலில், ஏன் இப்படி ஒரு இமெயில்? இதைப் பதிவிட்டால் விளக்கம் வருகிறதா பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X