சீனாவை விட மாட்டோம்: மல்லுக்கட்டும் அமெரிக்கா

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
வாஷிங்டன் : ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கொரோனா முதன் முதலில் எங்கு தோன்றியது என்பது குறித்த விஷயத்தில், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு
china, America, US, Joe Biden

வாஷிங்டன் : ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கொரோனா முதன் முதலில் எங்கு தோன்றியது என்பது குறித்த விஷயத்தில், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியதாவது: கொரோனா தோன்றிய விபரங்களை சீனா வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக அமெரிக்கா, உலக நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும். சீனா சொல்வதை எல்லாம் கேட்டு, அமெரிக்கா தலையாட்டாது. இது தவிர, கொரோனா தோன்றியது குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையும் தொடரும்.

கொரோனா தோன்றிய விபரங்களை மறைக்காமல் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்த, அமெரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். உலக சுகாதார நிறுவனம், சீனாவில் மேற்கொண்ட கொரோனா தொடர்பான ஆய்வை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


முதல் வெளிநாட்டு பயணம்


அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், ஜோ பைடன், தன் முதல் வெளிநாட்டு பயணத்தை இன்று(ஜூன் 9) துவக்குகிறார். ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், சுவிட்சர்லாந்துக்கு செல்லும் அவர், ஜி - 7 மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்கிறார்.


latest tamil news



அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றார் ஜோ பைடன். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால், அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தினார். அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. மற்ற நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு இருந்ததால், எந்த நாட்டுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், தன் முதல் வெளிநாட்டு பயணத்தை அவர், இன்று துவக்குகிறார். முதலில் பிரிட்டன் செல்லும் அவர், ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கொரோனாவுக்கு எதிராக உலகளாவிய திட்டம் குறித்து, இந்த கூட்டத்தில் அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் போட்டியை சமாளிக்கும் வகையில், இந்த கூட்டமைப்பு பல முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளார். அடுத்த வாரம் இறுதி வரையிலான இந்த பயணத்தின்போது, நாட்டோ அமைப்பின் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். ஐரோப்பிய யூனியன் - அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த பயணங்களில்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கி கொள்வது உள்ளிட்டவை குறித்து, ஜோ பைடன் பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா செல்லும் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச உள்ளார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
09-ஜூன்-202111:31:09 IST Report Abuse
sahayadhas பாவம் உலக மக்கள் ஆரோக்கியத்தை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது, டிராம்ப் தொடர்ந்திருந்தால் தாக்குதல் இல்லை என்றாலும் சீனாவிற்கு அதிக நெருக்கடியை கொடுத்திருப்பார். பைடன் அமெரிக்காவை சீனாவிற்கு விற்று விடுவார் என்றார் டிரம்ப் அது தொடங்கி உள்ளது. டிரம்ப் நீடித்தால் நம்ம ஆள் தாடி வைத்திருக்க மாட்டார்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-ஜூன்-202111:16:38 IST Report Abuse
blocked user கம்மிகளையாவது நம்பி விடலாம் - ஆனால் இடதுசாரி லிபரல்களை நம்பவே முடியாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-ஜூன்-202111:07:17 IST Report Abuse
blocked user பொருளாதாரத்தை வைத்துத்தான் சீனாவை அடிபணிய வைக்க முடியும். அமெரிக்கக் குடியுரிமை வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பார்கள் - ஆனால் நிறைய சீனர்கள் அப்படி அல்ல. நிறுவனங்களிலிருந்து தகவல்களை, தொழில் நுணுக்கங்களை திருடி சீனாவுக்கு விற்றுக்கொண்டுதான் இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X