"வாய் தவறி பின்லேடனை தியாகி என கூறிவிட்டார் இம்ரான்”: பாக்., அமைச்சர் விளக்கம்

Updated : ஜூன் 27, 2021 | Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய, பிரதமர் இம்ரான் கான் ஒசாமா பின்லேடனை தியாகி என்றார். அது அவர் வாய் தவறி சொன்னது என அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார்.கடந்த 2020 ஜூன் மாதம், 'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடம்' என அமெரிக்கா ஒரு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. அதற்கு பதில் தரும் வகையில் அந்நாட்டு

இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய, பிரதமர் இம்ரான் கான் ஒசாமா பின்லேடனை தியாகி என்றார். அது அவர் வாய் தவறி சொன்னது என அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார்.



latest tamil news




கடந்த 2020 ஜூன் மாதம், 'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடம்' என அமெரிக்கா ஒரு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. அதற்கு பதில் தரும் வகையில் அந்நாட்டு பார்லி.,யில் பிரதமர் இம்ரான் பேசினார். அப்போது “அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். அவர் ஒரு தியாகி. அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம்.” என்று பேசினார். இப்பேச்சு உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் எதிர்க்கட்சியினரும் கூட இம்ரானை கண்டித்தனர்.


latest tamil news




பாவத் சவுத்ரி சமாளிப்பு



இந்நிலையில் பாக்., தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு மத்திய அமைச்சர் பாவத் சவுத்ரி, வாய்தவறி பின்லேடனை தியாகி என இம்ரான் கூறிவிட்டதாக சமாளித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்து ஐ.நா.,வில் பாகிஸ்தான் வாக்களித்ததையும் சுட்டிக்காட்டினார். மேலும், ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளை ஐ.நா., சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததையும் ஆதரித்தோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் நிறைய தியாகம் செய்துள்ளது என கூறினார். ஒசாமா பின்லேடன் ஒரு பயங்கரவாதி, அல்கொய்தா ஒரு பயங்கரவாத இயக்கம் என்றே பாக்., கருதுகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202107:31:11 IST Report Abuse
பேசும் தமிழன் உள் மனத்தில் இருப்பது தான் வெளியே வரும்.... இவர்கள் அவனை தியாகி போல் தான் நினைக்கிறார்கள்
Rate this:
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-202101:25:06 IST Report Abuse
TAMILAN இவர் இன்னொரு ஸ்டாலினாக இருப்பார் போலிறுக்கின்றதே?
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
27-ஜூன்-202123:34:25 IST Report Abuse
kijan யோவ் பவாது ...வாய்யா .... நீ தானே சந்திராயன்-2 மூன்-ல விழுந்ததா இல்ல மும்பைல விழுந்துதான்னு தெரியல ...900 கோடிக்கு கணக்கு காட்டிட்டாங்கன்னு சொன்னவன் .... உங்காளு வாய் தவறாமல் என்ன சொல்லிஇருப்பாருன்னும் சொல்லிடேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X