அமெரிக்க எம்.பி.,க்களுக்கு பணம் : குலாம் நபி பய்யிடம் இன்று கோர்ட்டில் விசாரணை

Updated : ஜூலை 22, 2011 | Added : ஜூலை 21, 2011
Advertisement

வாஷிங்டன் : காஷ்மீர் விஷயத்தில் ஆதரவாக செயல்படுவதற்காக, அமெரிக்க எம்.பி.,க்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து பணம் பெற்று கொடுக்க முயன்ற, குலாம் நபி பய்யிடம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. காஷ்மீரை சேர்ந்தவர் குலாம் நபி பய், 62. காஷ்மீர் விடுதலைக்கான இயக்கத்தை வாஷிங்டனில் நடத்தி வருகிறார். காஷ்மீர் - அமெரிக்கன் கவுன்சில் என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், காஷ்மீருக்கு ஆதரவாக அமெரிக்காவை பேச வைக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வந்தார்.


காஷ்மீர் விடுதலை குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்து, அதற்கு அமெரிக்க எம்.பி.,க்களை அழைத்து, காஷ்மீருக்கு ஆதரவாக பேச வைப்பதற்காக, பாகிஸ்தான் உளவு அமைப்பு இவருக்கு, 18 கோடி ரூபாயளவுக்கு நிதி உதவி செய்துள்ளது. இந்த பணத்தை குலாம் நபி பய் பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து கொண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டதற்காகவும், எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்க முயன்றதற்காகவும், இவரை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப்.பி.ஐ.,கைது செய்துள்ளது. இவர் மீதான விசாரணை விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெச்சாண்டிரியா கோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது. கடந்த 95ம் ஆண்டிலிருந்து, ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து குலாம் நபிக்கு பண உதவி கிடைத்து வருவதாகவும், குலாம்நபி கைது செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்க - பாகிஸ்தான் உறவில் மீண்டும் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X