தமிழ்நாடு

டெலிவரி செய்யாத தபால்கள் மூட்டை மூட்டையாக கண்டுபிடிப்பு : பொதுமக்கள் புகாரில் எம்.எல்.ஏ. அதிரடி

Added : ஜூலை 22, 2011 | கருத்துகள் (6)
Advertisement

நாகர்கோவில் : நாகர்கோவிலில் பல மாதங்களாக டெலிவரி செய்யாத தபால்கள் மூட்டை மூட்டையாக கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்களின் புகாரை தொடர்ந்து நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
நாகர்கோவில் வடிவீஸ்வரம், இசங்கவிளை, பீச்ரோடு, செட்டிக்குளம் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல மாதங்களாக தபால்கள் சரிவர மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற புகார் இருந்து வந்தது. இந்நிலையில் வடிவீஸ்வரத்தில் உள்ள போஸ்ட்மேன் ஒருவர் சரிவர தபால்களை டெலிவரி செய்யாமல் வீட்டிலே மூட்டை, மீட்டையாக கட்டி வைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இதை பலர் நம்பாத நிலையில் இந்த புகார் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திலும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. நேற்று இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு வடிவீஸ்வரம் கல்மாடதெருவில் உள்ள போஸ்ட்மேன் கணேசன்(32) என்பவர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது கணேசனின் மனைவியிடம் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்த தபால்களை கேட்டபோது, அதை கோட்டாரில் போட்டுவிட்டதாக கூறினார். பின்னர் மொட்டை மாடியில் பார்த்தபோது அங்கே 5 மூட்டையில் தபால்கள் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மூட்டையை பிரித்து பார்த்தபோது அவற்றில் பல தொலைதூர கல்வி ஹால்டிக்கெட், தகவல்கள், எல்.ஐ.சி. பாலிசி கார்டு, மற்றும் சென்னை, டெல்லி, திருவனந்தபுரம், மும்பை என்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த தபால்கள் டெலிவரி செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 7 மாதத்திற்கு மேல் இவ்வாறு தபால்கள் டெலிவரி செய்யப்படாததால் மூட்டையாக தேங்கியுள்ளது. போஸ்ட்மேன் கணேசன் அஞ்சலகத்தில் இருந்து தபால்களை கையெழுத்து போட்டு டெலிவரிக்காக வாங்கி வந்துவிட்டு அவற்றை உரியவரிடம் கொடுக்காமல் வீட்டிலே வைத்திருப்பது தெரியவந்தது. பொதுமக்களுக்கு உரிய சேவை செய்யாத போஸ்ட்மேன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பவ இடத்திற்கு வந்த நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். அப்போது அங்கு வந்த கோட்டார் போலீசார், ஏற்கனவே கணேசன் கத்திக்குத்து, வழிப்பறி தொடர்பாக கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அஞ்சலகத்தில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். தற்போது தபால்களை டெலிவரி செய்யாமல் வீட்டில் மூட்டையாக கட்டி வைத்துள்ளது குறித்து அஞ்சல்துறைக்கு தெரியப்படுத்துவோம். மேற்கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர். தபால்களை டெலிவரி செய்யாமல் வீட்டில் மூட்டையாக கட்டிவைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pandian - sivaganga,,இந்தியா
24-ஜூலை-201111:24:10 IST Report Abuse
pandian தபால் ஊழியர்களை தற்காலிகமாக தேர்வு செய்வதை கை விட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் செலக்ட் செய்து பனி நியமன ஆணை வழங்க வேண்ண்டும்
Rate this:
Share this comment
Cancel
vsrinivasan - pondicherry,இந்தியா
24-ஜூலை-201104:34:53 IST Report Abuse
vsrinivasan தபால் நம்பக தன்மையை இழந்து விட்டது . கடமை தவறிய போஸ்ட் MAN கள் பலரை யும் அவர்கள் வீடு களையும் சோதனை இட வேண்டும் . பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .திருமண பத்திரிகைகள் , கிரக பிரவேசம் பத்திரிகைகள் போன்றவைகள் போய் உரிய இடத்திற்கு சேர்வதில்லை .
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
23-ஜூலை-201111:51:58 IST Report Abuse
S.M.Noohu சஸ்பென்ட் செய்ததை விட அவரை வேலையே விட்டு நிறுத்துவது தான் நல்லது. இவர் செய்த இந்த நாசகாரியத்தால் எத்தனை பேருடைய வேலை வாய்ப்பு பறிபோனதோ, எத்தனை காசோலைகள் முடங்கி, பல நல்லது,கெட்டது நடக்காமல் போனதோ, வேலை இல்லாமல் படித்தவர்கள் வீதியில் வேலை தேடி அலைகையில், கிடைத்த வேலையே சரிவர செய்யாமல் இருந்த இவருக்கு ...ஒரே தீர்வு இவரை வேலை விட்டு தூக்குவதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X