பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நில மோசடி புகார் வாபஸ்

Added : ஜூலை 22, 2011 | கருத்துகள் (3)
Advertisement

திருவண்ணாமலை: அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார் செய்தவர், அதை வாபஸ் பெற்றார்.திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பஞ்சாயத்து துணை தலைவர் அ.தி.மு.க.,மாவட்ட பிரதிநிதியான மூர்த்தி. இவர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள தென்பள்ளிப்பட்டு சாலையில் இவருக்கும், பரசுராமன் மற்றும் மாரிமுத்து ஆகிய மூவருக்கும் சொந்தமான நிலம், 4 ஏக்கர் 60 சென்ட்டை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோசடி செய்து பெற்று கொண்டு, பணத்தை கொடுக்க மறுத்து வருகிறார், எனக்கு பணத்தையோ அல்லது மோசடி செய்து எழுதி வாங்கி கொண்ட நிலத்தையோ திரும்ப பெற்று தர வேண்டும் என, கடந்த 20ம் தேதி போலீசில் புகார் செய்தார். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அ.தி.மு.க., தலைமையும் இந்த புகார் மீது விசாரணை நடத்தியது. இந்த புகார் தொடர்பாக அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., சார்பில் மூர்த்தி மற்றும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருதரப்பையும் அழைத்து நேற்று விசாரணை நடத்தினர்.அப்போது, புகாரை வாபஸ் பெறுமாறு மூர்த்திக்கு, பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மூர்த்தி, எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து புகார் மனுவை வாபஸ் பெறுவதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தார்.
மனுவை பெற்று கொண்ட போலீஸார், எஸ்.பி., சாமுண்டீஸ்வரி அலுவலக வேலை காரணமாக சென்னை சென்றுள்ளார். அவரிடம் நீங்கள் நேரில் சந்தித்து காரணத்தை கூறி புகார் மனுவை வாபஸ் பெற்று செல்லுமாறு கூறி அனுப்பி விட்டனர்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
22-ஜூலை-201122:15:42 IST Report Abuse
rajan பரசுராமன் & மாரிமுத்துவுக்கு பன்னீர் ஐயா பன்னீர் தெளித்து சரி பண்ணின்னார இல்ல பணத்த கொடுத்து பைசல பண்ணினார இல்ல டான்சி கேசு மாதிரி சமரசம் பண்ணிட்டார. கொஞ்சம் தெளிவா நடந்த உண்மைய மக்களுக்கு சொல்லலாம்ல? எப்படி
Rate this:
Share this comment
Cancel
KKM - Utah,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201122:06:25 IST Report Abuse
KKM திரு பன்னீர்செல்வம் அறிவுறுத்திநாரா இல்லை நாங்கள் ஆளுங்கட்சி என்ன வேணும்னாலும் இப்போது உன்னை செய்யலாம் என்று பயமுறுத்தினாரா....எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்
Rate this:
Share this comment
Cancel
perumal - Bonn,ஜெர்மனி
22-ஜூலை-201119:51:34 IST Report Abuse
perumal Thanks,we can see so many future act similar to this,Do this is not to be considered as "KATTA PANCHAYAT",when a case is being filed in police station why ministers are forming a team and settling issues and why this cannot be done in other cases,so that the judiciary can effectively spend time on other issues.Hence it is clear cases against pala karupaiah and another minister on land grabbing case would also be withdrawn.The governement should act unbiased.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X