அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் லோக்பால் மசோதா : கபில் சிபல்

Updated : ஜூலை 24, 2011 | Added : ஜூலை 22, 2011 | கருத்துகள் (8)
Share
Advertisement
LoKPal, bill, cabinet meeting, Kapil Sibal, லோக்பால் மசோதா, தாக்கல், அமைச்சரவை கூட்டம், கபில் சிபல்,

புதுடில்லி: ""லோக்பால் மசோதா தயாராகி விட்டது. அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில், அது தாக்கல் செய்யப்படும்,'' என, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: லோக்பால் மசோதா தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் சில உறுதிமொழிகளை நாட்டிற்கு அளித்தார். அந்த உறுதிமொழிகள் காப்பாற்றப்பட உள்ளன. லோக்பால் மசோதா தயாராகி விட்டது. மத்திய அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் அது தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும். லோக்பால் மசோதா தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. எனவே, லோக்பால் மசோதா அமைச்சரவையின் பரிசீலனைக்கு வரும் போது, லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரைச் சேர்ப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது என்பதே, நான் உட்பட லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம் பெற்ற ஐந்து அமைச்சர்களின் கருத்து. சி.பி.ஐ., போன்ற எந்த அமைப்பாலும், விசாரிக்கப்படாத விவகாரங்கள் குறித்து, லோக்பால் விசாரிக்க முடியும். அதற்கேற்ற வகையில் விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம் பெற்ற சமூக பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சில யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சில யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தனிநபர் ஒருவர் மசோதா கொண்டுவர சட்டத்தில் விதிமுறைகள் இல்லை. எனவே, இந்த மசோதா தொடர்பாக அன்னா ஹசாரே ஏதாவது தெரிவிக்க விரும்பினால், அதை பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம். ஹசாரே தலைமையிலான அணியினர், எனது தொகுதியில் நடத்துவது கருத்துக் கணிப்பும் அல்ல, சர்வேயும் அல்ல. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRAKUMAR.M - puducherry,இந்தியா
24-ஜூலை-201107:59:37 IST Report Abuse
CHANDRAKUMAR.M இந்த பாம்ப பார்த்து யாரும் பயப்படாதீங்க, இது யாரையும் ஒன்னும் செய்யாது. இது அண்ணா ஹசாரே சொன்ன உண்மையான பாபு கிடையாது. சும்மா பயமுறுத்த நாமே உருவாக்கின டம்மி பாம்புதான்-கபில் சிபல்
Rate this:
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
23-ஜூலை-201117:03:35 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN கபில் சிபலின் லோக் பால் மசோதா தாக்கல் செய்யபட்டால் என்ன செய்ய படாவிட்டால் என்ன ? அதுவும் ஒரு கொள்ளை வ்யூகமாகத்தான் இருக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.
Rate this:
Cancel
Gunasekar - hyderabad,இந்தியா
23-ஜூலை-201116:26:25 IST Report Abuse
Gunasekar அன்னா ஹசாரே அவர்கள், மிக நேர்த்தியாக நம் இந்திய மக்களுக்காக போராடுகிறார். அவரைக் கண்டு காங்கிரெஸ் மிரள்வது அப்பட்டமாக தெரிகிறது. வாழ்க அன்னா ஹசார.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X