பெட்ரோல் விலை குறைக்க முயற்சி! ; பா.ஜ., அண்ணாமலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பெட்ரோல் விலை குறைக்க முயற்சி!' ; பா.ஜ., அண்ணாமலை

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (18)
Share
சென்னை : ''பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 75 நாட்கள் கடந்தும், முழுமையாக ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இருந்து, 'நீட்' தேர்வு வரை, அனைத்தையும் கூறி விட்டு, அதற்கெல்லாம் ஒரு

சென்னை : ''பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.



latest tamil news



சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 75 நாட்கள் கடந்தும், முழுமையாக ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இருந்து, 'நீட்' தேர்வு வரை, அனைத்தையும் கூறி விட்டு, அதற்கெல்லாம் ஒரு காரணத்தை, தற்போது சொல்லி வருகின்றனர்.தி.மு.க.,வினர், மீனவர்களுக்கு எதிராக எடுக்கும் செயல்பாடுகளை கண்டித்து, பா.ஜ., மீனவர் அணி சார்பில், நாளை போராட்டம் நடைபெறுகிறது.


latest tamil news



ஆகஸ்ட் மாதம், டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளோம். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரி வரம்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு தயார். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X