சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது

Added : ஜூன் 29, 2010 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அன்பழகன்(35), புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த முருகன்(35), லோகம்பாள்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ்(28) மற்றும் ஆந்திராவின் கோதாவரி மாவட்டம், தேவதள்ள பாளத்தைச் சேர்ந்த புஜ்ஜிபாபு(26) ஆகியோர், சென்னையிலிருந்து பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவர்களை சுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தார். புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த மோசடி கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப இருந்த பெண்களின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல்கள் கைப்பற்றப்பட்டன. பெருநகர குற்றவியல் கோர்ட் உத்தரவுப்படி, குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்மோசடியில் ஈடுபடும் கும்பல்களை தேடும்பணி தொடரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அல் அமீன் - Chennai,இந்தியா
29-ஜூன்-201010:54:16 IST Report Abuse
அல் அமீன் இவர்களை கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அரசு..... இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மற்ற பரதேசி.... பன்னாடைகள் திருந்த வேண்டும் (பயந்து) .... பெண்களை அவர்களின் இடத்திற்கே திருப்பியனுப்ப வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X