அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு விலக்கு மசோதா; சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (107+ 40)
Share
Advertisement
சென்னை: நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று (செப்.,13) தாக்கல் செய்தார். பா.ஜ., வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் இம்மசோதா ஒருமனதாக நிறைவேறியது.மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று (செப்.,13) சட்டசபை மீண்டும் கூடியது. சட்டசபை கூட்டம் கூடியதும், எதிர்க்கட்சி தலைவர்
NEET, Tamilnadu, Assembly, CM, Stalin, DMK, நீட், மசோதா, தமிழ்நாடு, தமிழகம், சட்டசபை, முதல்வர், ஸ்டாலின், திமுக

சென்னை: நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று (செப்.,13) தாக்கல் செய்தார். பா.ஜ., வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் இம்மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று (செப்.,13) சட்டசபை மீண்டும் கூடியது. சட்டசபை கூட்டம் கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‛நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க., அளித்த வாக்குறுதி என்ன ஆனது?' எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது கூட நீட் தேர்வு நடக்கவில்லை. பழனிசாமி முதல்வராக இருந்தபோது மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டது.


latest tamil news


தொடக்கத்தில் இருந்து நீட் நுழைவு தேர்வை தி.மு.க., எதிர்த்து வருகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை துவங்கியுள்ளது. இன்று தாக்கல் செய்துள்ள நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும். மருத்துவப் படிப்பிற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.


latest tamil news


அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடும் தொடரும் வகையில் மசோதா இருக்கும். நீட்டில் நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்து செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ‛நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அ.தி.மு.க., ஆதரிக்கும்,' எனக்கூறினார். பின்னர், மீண்டும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை கூட்டத்தொடருக்கு திரும்பினர்.

நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மற்ற கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.


காவல்துறை ஆணையம்:

காவல்துறை மானிய கோரிக்கையின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதிச் சண்டைகள் இல்லை, மத மோதல்கள் எழவில்லை, துப்பாக்கிச் சூடுகள் இல்லை, அராஜகங்கள் இல்லை. விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா மரண வழக்கின் விசாரணையும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். சாதி, மதம், கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்சோ வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (107+ 40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
17-செப்-202112:41:54 IST Report Abuse
sankar "நீட் தேர்வு, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி தி.மு.க. அங்கம் வகித்த ஐ.மு.கூ. தலைமையேற்ற ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது. பாஜக தலைமையிலான அரசு, தமிழகத்துக்கு ஒரு வருடம் விலக்கு அளித்தது. இதுதான் உண்மை", தெள்ளத் தெளிவான விளக்கம் -
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
14-செப்-202114:11:30 IST Report Abuse
 Madhu //நீட் இல்லாம பட்டம் பெற்ற தமிழ்நாட்டு டாக்டரிடம்தான்... நீயும், உன் பெற்றோரும், தாத்தா பாட்டிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு தொங்கிகிட்டிருக்கே என்பதை மறந்துடாத// இதற்கான விளக்கம் யாரிடமும் இல்லை....//அப்படிங்களா ஐயா உங்க பாட்டி, அவங்க அம்மா, அவங்க பாட்டியெல்லாம் +2 படிச்சு 'பாஸ்' பண்ணிட்டு வீட்டிலேயே அனைவரும் டாக்டர் ஆகாமலேயே, மருத்துவக் கல்லூரியில் சேராமலேயே வீட்டிலேயே பிரசவம் பார்த்து யாவரையும் பெற்றெடுத்தார்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டீர்களே இது நியாயமா ஐயா?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-செப்-202113:36:21 IST Report Abuse
மலரின் மகள் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். நிறைய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். போட்டி என்பது மிகவும் கடினமாக இருந்தால் தான் மாணவர்கள் சிறப்பாக பரிணமிப்பார்கள் எதிர்காலத்தில். உலகம் இன்று அனைத்தையும் எளிமைப்படுத்தி கொண்டு ஜாலியாக சுற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கைக்கு மாறி கொண்டிருக்கிறது. இதனால் நிறைய சோம்பேறிகள் அறிவை அரைகுறையாக அறிந்தவர்கள் எழில் மூன்றை கழித்தால் எத்துணை என்பதை சோசியல் மீடியாக்களில் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டிய நிலையில் இருப்பவர்கள் ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் எத்துணை என்று கோர்ட்டன, சிறி போன்ற செயலிகளை கேட்டு அறிந்து கொள்ளவேண்டிய நிலையில் இருப்பவர்களை உலகம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இது சிறப்பாக ஒருபோதும் இருக்காது. உலகம் இவாறு சென்று கொண்டிருக்க இதை மிக சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி நாம் நமது திறமைகளை பெருவாக வளர்த்துக்கொள்ளவேண்டும். மனித மூளையின் திறனை வளர்ப்பதும் செம்மைப்படுத்தி கொள்வதும் உடல் உழைப்பை சிறப்பாக்கி கொள்வதுமாக இருந்தால் தமிழன் உலகை ஆள்வான். எட்டு திக்கும் சென்று கலைச்செல்வங்களை வாரிவந்து குவிப்போம் நாம். உலகின் பல்வேறு இடங்களில் நமது சிறப்புக்களை பரிணமிக்கச்செய்வோம். அதற்கு நம்மை வெகு நேர்த்தியாக செதுக்கி கொள்ளவேண்டும். போட்டி தேர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்றவைகள் பெற்றோர்களின் சேமிப்பை ஊழலுக்கு கொடுத்து இடம் பிடிக்கும் கல்வி வேலைவாய்ப்பில். போட்டி என்பது சிறப்பு. பொறாமை கொள்ளவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X