சொகுசு காருக்கு நுழைவு வரி பாக்கி செலுத்திய நடிகர் விஜய்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (46)
Advertisement
சென்னை : சொகுசு காருக்கான நுழைவு வரியை, நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.கடந்த, 2012ல், பிரிட்டனில் இருந்து, 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை, நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல் செய்தார்.மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒரு லட்சம்
Vijay, High Court, Rolls Royce

சென்னை : சொகுசு காருக்கான நுழைவு வரியை, நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த, 2012ல், பிரிட்டனில் இருந்து, 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை, நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல் செய்தார்.மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒரு லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க, விஜய்க்கு உத்தரவிட்டார்.

நடிகர்கள் முறையாக வரி செலுத்தவும், 'ரியல் ஹீரோ'வாக இருக்க வேண்டும்; 'ரீல் ஹீரோ'வாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான அமர்வில், விசாரணைக்கு வந்தது.


latest tamil news


ஏற்கனவே செலுத்திய, 20 சதவீதம் தவிர்த்து, மீதி 80 சதவீத வரி தொடர்பாக, கேட்பு ரசீது வழங்கினால், ஒரு வாரத்தில் செலுத்துவதாக, விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பு வழக்கறிஞர், 'மனுதாரர் செலுத்த வேண்டிய மீதி தொகைக்கு, ரசீது வழங்கும்படி அறிவுறுத்துகிறேன்' என்றார்.

இதையடுத்து, அபராதம் விதித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஒரு வாரத்தில் மீதி தொகைக்கான ரசீதை வணிக வரித்துறை வழங்கவும், அந்த தொகையை ஒரு வாரத்தில், மனுதாரர் செலுத்தவும், டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

இறக்குமதி காருக்கான நுழைவு வரி பாக்கி செலுத்தப்பட்டு விட்டதாக, அரசு தரப்பிலும், விஜய் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
17-செப்-202116:55:38 IST Report Abuse
DVRR 2012-21. 9 வருடம் தாமதம்? ஆகவே அந்த நுழைவு வரிக்கு வட்டி என்று எடுத்தால் இரண்டு மடங்கு கட்டவேண்டியிருக்குமே அப்படி கட்டினாரா இல்லையா???
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
17-செப்-202116:15:35 IST Report Abuse
sri ஒரு சிலருக்கு வரிவிலக்கு கொடுப்பதினால் , வக்கீல்கள் வரிகொடுக்கவேண்டிய பணக்காரர்களை ஊக்குவித்து , நீதிமன்றத்தை அணுக ஆலோசனை சொல்கிறார்கள். வரிகளை நிர்ணயம் செய்யும்போது யாருக்குமே விலக்கு கிடையாது என்று முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் , இத்தகைய சம்பவம் நடந்திருக்காது. நடிகர் விஜய் விஷயத்தில் , வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் கட்டவேண்டிய 80 % வரியை வங்கி வைப்பில் போட்டிருந்தால் வந்திருக்கும் வட்டியைக்கூட , அபராதமாக விதிக்காமல் , வெறும் ஓரு லட்சம் ரூ மட்டுமே , நிவாரண நிதிக்கு கொடுக்க சொல்லி உத்தரவு விட்டிருக்கிறது , நீதிமன்றம். கிடைத்த லாபத்தை , வக்கீலும் விஜயும் பங்குபோட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள் . நாம் பொங்கிப்போய் கருத்து தெரிவித்துக்கொண்டிருப்போம் .
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
17-செப்-202115:14:49 IST Report Abuse
krishna enna dhairiyam இருந்தால் நம்ம அட்டா கத்தி ஹீரோ சோசப்பு விஜய் கிட்டயே வரி வாங்குவிங்க..10 ருபாய் மட்டும் வாங்கி டாக்டர் சேவை சினிமாவில் புரிந்த மாவீரன் சோசப்பு விஜய்க்கே இந்த கதியா.சோசப் ரசிகர்களே பொங்கி எழுந்து தமிழ் நாடே அதிரும் வகையில் போராட்டம் தொடங்க வேண்டும்.அதற்க்கு நம்ம உதவாத நிதி இன்ப நிதி தலைமை ஈர்க்க தயார்.ஆனா பினிஷில் எல்லோரும் சேர்ந்து மோடி ஒழிக என கதறி விட்டுத்தான் போராடட நிறுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X