நீட் தேர்வால் பாதிப்பு என்ன? நீதிபதி ராஜன் அறிக்கை வெளியீடு!| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வால் பாதிப்பு என்ன? நீதிபதி ராஜன் அறிக்கை வெளியீடு!

Updated : செப் 22, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (24)
Share
சென்னை :தமிழகத்தில், 'நீட்' தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அளித்த அறிக்கையை, நேற்று தமிழக அரசு வெளியிட்டது.'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். முதல்வரானதும், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 'நீட்' தேர்வின்
 'நீட்' தேர்வால் பாதிப்பு என்ன? நீதிபதி ராஜன் அறிக்கை வெளியீடு!

சென்னை :தமிழகத்தில், 'நீட்' தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அளித்த அறிக்கையை, நேற்று தமிழக அரசு வெளியிட்டது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என, தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். முதல்வரானதும், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து ஜூன், 5ம் தேதி உத்தரவிட்டார்.

இக்குழு பல்வேறு ஆய்வுகளை நடத்திய நிலையில், ஜூலை மாதம் முதல்வரை சந்தித்து 165 பக்க அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளித்த 165 பக்க அறிக்கையை அரசு வெளியிட்டது.

அந்த அறிக்கையில், 'நீட் ரத்து சட்டம், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில், பிளஸ் 2 வகுப்பில் எத்தனை மாணவர்கள், அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில், மத்திய பாடத் திட்ட பள்ளிகளில் படிக்கின்றனர்; அவர்களில் ஒவ்வொரு ஆண்டும், எத்தனை பேர் மருத்துவ கல்லுாரிகளில் சேருகின்றனர் என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
'நீட்' தேர்வுக்கு முன்பாக, மருத்துவ கல்லுாரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை, இரட்டை இலக்கத்தில் இருந்துள்ளது.
நீட் வந்த பின், ஒற்றை இலக்கத்திற்கு மாறியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய பின், அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை, மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X