அரசியல் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்பு வீரபாண்டி.. கோவை சிறையில் எண்ணுகிறார் 1, 2, 3...!

Updated : ஆக 01, 2011 | Added : ஜூலை 30, 2011 | கருத்துகள் (83)
Advertisement
நில அபகரிப்பு வீரபாண்டி..."கம்பிக்குள்ளே!':கோவை சிறையில் எண்ணுகிறார் 1, 2, 3...!

சேலம்:நில மோசடி தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது, மேலும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சேலம், தாசநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமோகன்ராஜ். அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவராகவும், சேலம் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவராகவும் உள்ளார்.திருச்சி மெயின் ரோடு, சுபம் மெட்ரிகுலேசன் பள்ளி அருகே, இவருக்குச் சொந்தமாக, 21 ஆயிரத்து, 491 சதுர அடி நிலம் உள்ளது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உத்தரவுப்படி, 2007 மார்ச் 25ம் தேதி, பாரப்பட்டி சுரேஷ்குமார், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் நாராயணன் ஆகியோர், அந்த நிலத்தை விற்கும்படி மிரட்டினர். விற்பனை செய்ய மறுக்கவே, மார்ச் 27 மாலையில் பாலமோகன்ராஜ், அவரின் மனைவியை, முன்னாள் அமைச்சரின் வீடு உள்ள பூலாவரிக்கு, சமாதானம் பேசுவது போல் அழைத்துச் சென்று, முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. அன்று மாலை, பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி ஆகியோரும் மிரட்டல் விடுத்தனர்.


அதையடுத்து, மார்ச் 28ல் கவுசிக பூபதி பெயரில் அந்த நிலம், "பவர் ஆப் அட்டர்னி' செய்யப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்துக்கு வெறும், 40 லட்ச ரூபாயை மட்டுமே பாலமோகன்ராஜுக்கு வழங்கினர்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கவுசிக பூபதி, சேலம் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பத்திர எழுத்தர் சுந்தரம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் நாராயணன் மற்றும் சிலர் மிரட்டி, நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டதாக, பாலமோகன்ராஜ், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் தெரிவித்தார். விசாரணை மேற்கொண்ட உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர், முன்னாள் அமைச்சர் உட்பட ஐந்து பேர் மீது, சட்ட விரோதமாக நான்கு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுதல், அத்து மீறி உள்ளே நுழைதல், அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுதல், அத்துமீறுதல், மிரட்டி பணம் பறித்தல், நிலத்தை அபகரித்தல், மிரட்டல் மூலம் அபகரித்துக் கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மட்டும் கைது செய்துள்ளனர்.


அ.தி.மு.க., வழக்கறிஞரும், புகார்தாரரின் நெருங்கிய உறவினருமான மணிகண்டன் கூறியதாவது:என் உறவினர் பாலமோன்ராஜை மிரட்டி, நிலத்தை அபகரித்தது மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பினாமியாக இருந்து, எங்கள் பகுதியில் பலரது நிலத்தை அபகரிக்க, பத்திர எழுத்தர் சுந்தரம் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.
தற்போது, பாலமோகன்ராஜின் நிலம், கவுசிக பூபதி பெரியில், "பவர் ஆப் பட்டா' மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால், இடம் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.
இந்த இடத்தின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், 10 "சென்ட்'டும், மேலும் ஓரிடத்தில் உள்ள 10 சென்ட் இடமும், முன்னாள் அமைச்சரின் முதல் மனைவி ரெங்கநாயகியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பத்திர எழுத்தர் சுந்தரத்திடம் போலீசார் விசாரணை நடத்தும் பட்சத்தில், பல்வேறு இடங்களில் நிலங்கள் அபகரிக்கப்பட்ட முழு விவரமும் வெளிச்சத்துக்கு வரும்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்.புகார்தாரர் பாலமோகன்ராஜ், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநில தலைவர் பூமொழி ஆகியோரின் வீடுகளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பஸ் கண்ணாடி உடைப்பு:முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் ஆதரவாளர்கள், சேலம் மாநகரில் ஆறு அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். நேற்று காலை 9.25 மணிக்கு, தௌசம்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ்சை, டிரைவர் செல்வகுமார் ஓட்டி வந்தார். பஸ், பெரியார் மேம்பாலத்தின் மேல் வந்த போது, மொபட்டில் வந்த இரண்டு பேர், கண்ணாடியின் மீது கல் எறிந்ததில், பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதே கும்பல், கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற அரசு டவுன் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்தது.இதில், தண்ணீர்தொட்டியைச் சேர்ந்த புஸ்பா, ஓமலூரைச் சேர்ந்த அனிதா, செட்டிபட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஆகியோருக்கு, உடைந்த பஸ் கண்ணாடியின் துகள்கள் பட்டு, காயம் ஏற்பட்டுள்ளது.இதேபோல், சேலம் மாநகரில் பேர்லேன்ட்ஸ், புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், குகை போன்ற இடங்களில், நேற்று மதியம் வரை, 11 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.


கோவை சிறையில் அடைப்பு: வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் கோர்ட்டில் ஆஜர் செய்த பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை 11.35 மணியளவில், கோவை மத்திய சிறை வளாகத்துக்குள் வீரபாண்டி ஆறுமுகம் வந்த வாகனம் நுழைந்தது. அப்போது, சிறை வளாகத்துக்கு முன் கூடியிருந்த தி.மு.க.,வினர், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும், போலீசார் அப்புறப்படுத்தினர். கோவை சிறையில் வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டார்.


வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டது எப்படி?சேலம்:போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, மேலும் ஒரு நில மோசடி வழக்கில், போலீசார் கைது செய்தனர்.சேலம், அங்கம்மாள் காலனி நிலம், ப்ரீமியர் ரோலர் மில் ஆகிவற்றை ஆக்கிரமிப்பு செய்ததாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 13 பேர் மீது, எட்டு பிரிவுகளில், மாநகர போலீசார் கடந்த 16ம் தேதி, வழக்கு பதிவு செய்தனர்.


இந்த வழக்கில், கோர்ட் உத்தரவுப்படி, ஜூலை 28 முதல், தினமும் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜராகி, கையெழுத்து போட்டு வந்தார். மூன்றாவது நாளான நேற்று காலை, 7.53 மணிக்கு, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உதவியாளர் சேகர், வழக்கறிஞர் மூர்த்தி ஆகியோர், வழக்கம் போல் கையெழுத்து போடுவதற்கு, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்தனர்.காலை, 7.57 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர், கன்டிஷன் பைலில் கையெழுத்து வாங்கினர். கையெழுத்து போடப்பட்ட நிலையில், துணை கமிஷனர் சத்யபிரியா அலுவலகத்துக்குள் நுழைந்தார்.


அடுத்த நிமிடமே, அதிரடிப்படை வாகனம், அலுவலகத்தின் முன் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. உள்ளே சென்ற துணை கமிஷனர் சத்யபிரியா, முன்னாள் அமைச்சரிடம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை, மிரட்டி வாங்கிய வழக்கில் கைது செய்யப்படுவதாகத் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இருப்பினும் அவர், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். போலீஸ் வாகனங்களை, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உள்ளிட்ட நிர்வாகிகள், ரோட்டில் உட்கார்ந்து மறித்தனர். அவர்கள் அனைவரையும், போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அகற்றினர். லேசான தடியடி பிரயோகம் நடத்தினர்.


இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனம் உட்பட ஏழு வாகனங்கள் வெளியில் வந்தன.சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முதல் கோர்ட் வரை, போக்குவரத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு, அனைத்து போலீஸ் வாகனங்களும் மின்னல் வேகத்தில் கோர்ட் வளாகம் அருகில் உள்ள நீதிபதியின் வீட்டுக்கு சென்றன. நீதிபதி ஸ்ரீவித்யா முன், முன்னாள் அமைச்சரை போலீசார் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். உடனடியாக அவரை, கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்க உத்தரவிட்ட பின், வேனில் ஏற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கண் கலங்கினார். அவர் கண் கலங்கியதையும், அழுததையும் போலீசார் எவரும் கண்டுகொள்ளவில்லை.


Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanand Hariharakrisnan - chennai,இந்தியா
05-ஆக-201110:30:48 IST Report Abuse
Ramanand Hariharakrisnan "ஆறுமுகம்" போன்ற ஆட்களை கைது செய்வதை பொய் வழக்கு என்று சொல்வது இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல்தான் உள்ளது. இவர்கள் சென்ற ஆட்சியில் பல ஆயிர கணக்கான கோடி பணத்தை தங்கள் வசம் உள்ள தைரியத்தில் என்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் செலவழிக்க பணம் உள்ள தைரியத்தில் ஆடினால், ஆண்டவன் நினைத்தாள் உங்களிடம் உள்ள பணம் ஒரே நாளில் வெளிகொனரப்படும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தாங்கள் இருக்கும் போதே பார்த்து தி.மு.க. அழிவதை பார்த்து விட்டு தான் செல்லவேண்டும் என்பது ஒவோவ்ருதமிழனின் ஆசை. "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு." தவறு செய்தவன் திருந்தி ஆகணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும், இல்லை என்றல் ஆக்கப்படுவாய்
Rate this:
Share this comment
Cancel
Arun Chakravarthy - chennai,இந்தியா
01-ஆக-201116:06:06 IST Report Abuse
Arun Chakravarthy For every action there is an equal and opposite reaction.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Chennai,இந்தியா
01-ஆக-201101:27:49 IST Report Abuse
Suresh ஜேப்பியார் மீதும் பாதிரியார் மீதும் புகார் வந்து உள்ளதே.. என் இதற்க்கு மட்டும் இன்னும் ஒற்றும் செய்யவில்லை? பெட்டி பெட்டியாக கரன்சி சென்று உள்ளத...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X