அமெரிக்காவின் கடன் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படுமா?

Updated : ஆக 01, 2011 | Added : ஜூலை 31, 2011 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவின் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு இன்னும், 48 மணி நேரமே உள்ள நிலையில், மசோதா நிறைவேற்றம் என்ற பெயரில் அங்கு, நாடகங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையில், கடன் நெருக்கடி தொடர்பான தீர்வு எட்டப்பட்டு விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக, பிரதிநிதிகள் சபை
கடன் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படுமா?

வாஷிங்டன்:அமெரிக்காவின் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு இன்னும், 48 மணி நேரமே உள்ள நிலையில், மசோதா நிறைவேற்றம் என்ற பெயரில் அங்கு, நாடகங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையில், கடன் நெருக்கடி தொடர்பான தீர்வு எட்டப்பட்டு விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக, பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவருமான ஜான் பாய்னர் தயாரித்த மசோதா, அவரது கட்சியினராலேயே எதிர்க்கப்பட்டதால், பிரதிநிதிகள் சபையில், தாக்கலாவதில் தாமதமானது.


இதையடுத்து, தன் கட்சியினரைத் திருப்தி செய்வதற்காக, சில திருத்தங்களைச் செய்த பாய்னர், 22ம் தேதி பிரதிநிதிகள் சபையில், அதைத் தாக்கல் செய்தார். 218 உறுப்பினர்கள் ஆதரித்தும், 210 உறுப்பினர்கள் எதிர்த்தும் ஓட்டளித்ததால், மசோதா, மயிரிழையில் உயிர் பிழைத்தது.இரண்டு மணிநேரம் கழித்து அம்மசோதா, செனட்டில் தாக்கலானது. சொல்லி வைத்தபடி செனட்டின் பெரும்பான்மை உறுப்பினர்களான ஆளும் ஜனநாயகக் கட்சியினர், மசோதாவிற்கு எதிராக ஓட்டளித்து தோற்கடித்தனர். செனட்டில், 59 பேர் எதிர்த்தும், 41 பேர் ஆதரித்தும் ஓட்டளித்தனர்.


இதையடுத்து, செனட் பெரும்பான்மை கட்சித் தலைவரும், ஆளுங்கட்சி உறுப்பினருமான ஹாரி ரெய்டு, தன் மசோதாவில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தார். இம்மசோதா, 22ம் தேதி, செனட்டில் விவாதத்திற்கு விடப்பட்டது.இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை, பிரதிநிதிகள் சபையில், ரெய்டின் மசோதா மீதான அடையாள ஓட்டளிப்பு நடந்தது. அதில், அம்மசோதா, குடியரசுக் கட்சியினரால் நிராகரிக்கப்பட்டது.


இதையடுத்து, ரெய்டு மற்றும் பாய்னர் இருவரும் சரமாரியாக பரஸ்பரம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து இருதரப்பிலும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. அன்றைய தினம் இரவு, கடன் நெருக்கடிக்கான தீர்வுகள் எட்டப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாயின.இதுகுறித்து அதிபர் ஒபாமாவுடன், பேச்சு நடத்திய பாய்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாகக் கடன் நெருக்கடி ஏற்படாமல் தடுப்போம். அப்படி நேராது என உறுதியளிக்கிறேன்' என்றார்.
இந்தப் புதிய தீர்வு, மசோதாவாக வரையப்பட்டு இரு சபைகளிலும் விவாதிக்கப்பட்டு அதன் மீதான ஓட்டெடுப்பு நடந்து வெற்றி பெற்று, அதன் பின் அதிபர் கையெழுத்துக்குச் செல்ல வேண்டும். இன்னும், 48 மணி நேரமே உள்ள நிலையில், இவையனைத்தும் சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


ஒருவேளை கடன் நெருக்கடிக்கு எவ்விதத் தீர்வும் எட்டப்படாவிட்டால், எந்த ஒரு பின்விளைவுக்கும் தயாராக இருக்கும்படி, வால்ஸ்ட்ரீட்டில் உள்ள வங்கிகளுக்கு அமெரிக்க அரசு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, உலகம் முழுவதிலும் சில நிறுவனங்கள், அரசுகள், தங்கள் முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளன.இதற்கிடையில், "பாய்னர், ரெய்டு மசோதாக்களில் ஏதாவது ஒன்று நிறைவேறினாலும் அது, அமெரிக்காவின், "ஏ.ஏ.ஏ.,' என்ற உயர் தர கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை குறைக்கவே வழிகோலும்' என, கடன் மதிப்பீட்டு நிறுவனமான, "மூடிஸ்' எச்சரித்துள்ளது.எனினும், இன்று அல்லது நாளை, அமெரிக்க கடன் நெருக்கடிக்கான முழுமையான தீர்வு எட்டப்பட்டு விடும் என, உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


முடிவு எட்டப்படாவிட்டால்...* ஒவ்வொரு மாதமும் அமெரிக்க அரசு, 8 கோடி காசோலைகளின் பேரில் பணம் அளித்து வருகிறது. கடன் நெருக்கடிக்கு முடிவு எட்டப்படாவிடில், நிதியமைச்சகம் தன் கைவசம் உள்ள பணத்தில், இந்த காசோலைகளுக்கு அளிக்க வேண்டிய பணத்தை கொடுக்க முன்னுரிமை அளிக்கும்.
* இந்த காசோலைகள் மூலம், 5.6 கோடி ஓய்வூதியதாரர்களும், 83 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறுவர்.
* 39 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 18 லட்சம் ஒப்பந்ததாரர்களுக்கான ஊதியம் நிறுத்தப்படும்.
* ஏற்கனவே, 9 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும்.
* கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க, தாங்கள் முதலீடு செய்துள்ள தொகைக்கு, அதிக வட்டி தரும்படி முதலீட்டாளர்கள் நிதியமைச்சகத்தை நெருக்கலாம். அதனால், அவர்களைச் சமாளிக்க, வீட்டு அடமானக் கடன், கார் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டி அதிகரிக்கப்படலாம்.
* பங்குச் சந்தையில் ஓய்வூதியம் தொடர்பான பங்குகள் மிக மோசமாக பாதிக்கப்படலாம்.
* கடன் மதிப்பீட்டு நிறுவனமான, "மூடிஸ்', 177 முனிசிபல் நிர்வாகங்களின் கடன் மதிப்பீட்டை குறைக்கப் போவதாக மிரட்டியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் உட்கட்டமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்.


புதிய தீர்வின் அம்சங்கள்:


* கடன் உச்சவரம்பை, இரு கட்டங்களாக, 2.8 டிரில்லியன் டாலர் அளவிற்கு அதிகரிப்பது.
* முதற்கட்டமாக, 1 டிரில்லியன் டாலர் கடன் வாங்க உடனடி அனுமதி.
* இரு கட்சி கமிட்டி விரைவில் அமைக்கப்படும். அந்த கமிட்டி அனுமதியின் பேரில், இரண்டாவது கட்டமாக, 1.8 டிரில்லியன் டாலர் கடன் வாங்க அனுமதி அளிக்கப்படும்.
* பட்ஜெட்டில் குறைக்க வேண்டிய செலவுகள் பற்றி கமிட்டி பரிந்துரைக்கும்.
* பரிந்துரையை இரு சபைகளும் நிராகரிக்கும் பட்சத்தில், ராணுவம், முதியோருக்கான சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆகிய துறைகளில் தன்னிச்சையாக செலவுகள் குறைக்கப்படும்.
* முதியோருக்கான, "சோஷியல் செக்யூரிட்டி' ஓய்வூதியத் திட்டத்தில் செலவுகள் குறைக்கப்பட மாட்டாது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (5)

p.saravanan shiny - chennai,இந்தியா
02-ஆக-201106:32:48 IST Report Abuse
p.saravanan shiny இருப்பவர்களிடம் அடித்து பிடுங்கும் நாட்டிற்கு உழைக்க ஒரு சந்தர்ப்பம்
Rate this:
Cancel
Singam - Kuwait,குவைத்
01-ஆக-201115:41:58 IST Report Abuse
Singam மொத்தத்தில் அமெரிக்கா காலி.... சங்கு ஊத வேண்டியதுதான்....,. WE NEED CHANGES நு ஒரு லூசுத்தனமான மந்திரத்தை சொல்லி உலக பொருளாதாரத்தை நிமிர்த்தி காட்டுறேன்னு வெற்றிபெற்ற ஒபாமாவே விழி பிதுங்கி நிக்கிறார்...இவரும் சரியான காலி டப்பானு நிருபிச்ச்ட்டார்...
Rate this:
Cancel
venkatesh - Bangalore,இந்தியா
01-ஆக-201112:46:38 IST Report Abuse
venkatesh இதனால் இந்தியாவில் எந்தவளுக்கு பாதிப்பு ஈற்படும் என்று யாராவது சொல்ல முடியுமா? குறிப்பாக சாப்ட்வேர் துறையில்.. நன்றி..
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394