10, 11, 12 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10, 11, 12 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (7)
Share
சென்னை: நடப்பாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவருவதால், வரும் நவம்பர் 1-ம் தேதி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு நடைமுறைகள், நடைபெறவுள்ள
10, 11, 12 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது

சென்னை: நடப்பாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவருவதால், வரும் நவம்பர் 1-ம் தேதி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு நடைமுறைகள், நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகள் குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்.,12) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்.


latest tamil news


நடப்பாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பில்லை. நேரடியாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். அதற்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X