மூச்சுத்திணறலால் அகதிகள் 25 பேர் பலி

Added : ஆக 02, 2011
Share
Advertisement

ரோம்: இத்தாலி நாட்டில் குடியேறசென்ற ஆப்ரிக்காநாட்டை சேர்ந்த அகதிகள் மூச்சுத்திணறல் காரணமாக பலியாயினர். ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள லிபியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு வருவதையடுத்து அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதேபோன்று லாம்பிடுஸ் என்னும் தீவுப்பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இத்தாலி நாட்டிற்கு நாட்டிற்கு குடியேறுவதற்காக படகு ஒன்றில் புறப்பட்டனர். இத்தாலி நாட்டின் எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது அந்நாட்டின் கடலோர காவல் படையினர் வழிமறித்து சோதனையிட்டனர். சோதனையில் அகதிகளாக தங்கள் நாட்டிற்குள் தஞ்சம் புக இருப்பதையும், மேலும் அகதிகளில் சுமார் 25 பேர் பலியாகியிருப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.பலியானவர்களில் 36பெண்களும் 11 பேர்குழந்தைகளும் அடங்குவர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X