பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் செயலாளர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து அவசியமற்ற விவாதம்: தலைமை செயலர்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறி இருப்பதாக தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ''திட்டங்களின் செயலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின்
தலைமை செயலர், கடிதம், இறையன்பு

சென்னை: அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறி இருப்பதாக தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.


தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ''திட்டங்களின் செயலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை கவர்னருக்கு சமர்ப்பிக்க செயலாளர்கள் தயாராக இருக்கவும், கவர்னரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியபடுத்தப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் குறித்து சர்ச்சை எழுந்தது.



இந்நிலையில், இறையன்பு வெளியிட்ட அறிக்கையில்கூறப்பட்டு உள்ளதாவது: அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன். தமிழகத்திற்கு புதிய கவர்னர் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளை திரட்டி வைத்து கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியாக ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.


latest tamil news




திட்டங்கள் செயலாக்கங்கள் குறித்து, இதுபோல் தகவல்களை திரட்டி வைத்து கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும். இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
26-அக்-202122:29:43 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN திட்டங்கள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் முடிவு செய்யலாம் அதில் கவர்னர் கேள்வியெழுப்பி அறிந்து கொள்ளலாம் திட்டங்கள் அல்லது அவற்றின் செயலாக்கம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருந்தால் தலையிட்டு நடவடிக்கை எடுக்க அவருக்கு உரிமை உண்டு
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
26-அக்-202122:23:34 IST Report Abuse
Duruvesan கர்த்தரின் சீடர் இறை அம்பு வாழ்க ஆமென்
Rate this:
Cancel
26-அக்-202121:29:17 IST Report Abuse
ஆரூர் ரங் புரோகித் நேரடியாக ஆய்ந்தபோது அடிமைகளா. மாநில உரிமைகளை பறிகொடுத்து விட்டீர்களா என்று கூச்சல் போட்ட ஸ்டாலின்😎 இப்போ எல்லா விவரங்களையும் எனது மேசைக்கு கொண்டு வா என உத்தரவே போடும் கவர்னரின் நடவடிக்கையை எதிர்த்து .....🤫மூச்😫
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X