அரசின் செயலாளர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து அவசியமற்ற விவாதம்: தலைமை செயலர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் செயலாளர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து அவசியமற்ற விவாதம்: தலைமை செயலர்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (14)
Share
சென்னை: அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறி இருப்பதாக தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ''திட்டங்களின் செயலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின்
தலைமை செயலர், கடிதம், இறையன்பு

சென்னை: அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறி இருப்பதாக தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.


தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ''திட்டங்களின் செயலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை கவர்னருக்கு சமர்ப்பிக்க செயலாளர்கள் தயாராக இருக்கவும், கவர்னரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியபடுத்தப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் குறித்து சர்ச்சை எழுந்தது.



இந்நிலையில், இறையன்பு வெளியிட்ட அறிக்கையில்கூறப்பட்டு உள்ளதாவது: அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன். தமிழகத்திற்கு புதிய கவர்னர் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளை திரட்டி வைத்து கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியாக ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.


latest tamil news




திட்டங்கள் செயலாக்கங்கள் குறித்து, இதுபோல் தகவல்களை திரட்டி வைத்து கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும். இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X