பொது செய்தி

தமிழ்நாடு

60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

Added : ஆக 03, 2011 | கருத்துகள் (16)
Share
Advertisement
60 வயது பெண்ணுக்கு  குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

சென்னை: அறுபது வயது பெண்ணுக்கு, பழனி, பாலாஜி மருத்துவமனையில், செயற்கை முறை கருத்தரித்தல் மூலம், ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடியைச் சேர்ந்த ரிங்கேஸ்வரனுக்கு, 66 வயதாகிறது. இவரது மனைவி சரஸ்வதிக்கு, 60 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி, 40 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பழனி, டி.எஸ்.மருத்துவமனையில் இயங்கி வரும், பாலாஜி செயற்கை முறை கருத்தரித்தல் (டெஸ்ட் டியூப் பேபி) மையத்தில், கடந்த ஆண்டு சரஸ்வதி சிகிச்சைக்கு சேர்ந்தார். சிகிச்சை வெற்றியடைந்ததால், சரஸ்வதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் செய்து, 40 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதால், தம்பதியர் சந்தோஷமடைந்துள்ளனர். இந்த தம்பதியருக்கு சிகிச்சை அளித்த, பழனி, பாலாஜி மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர், டாக்டர் செந்தாமரைச்செல்வியும், இத்தம்பதியும் குழந்தையுடன் நேற்று சென்னை வந்தனர்.

பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில், டாக்டர் செந்தாமரைச் செல்வி கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு, சரஸ்வதி - ரிங்கேஸ்வரன் தம்பதியர் ஒரு ஆண்டுக்கு முன் குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்தனர். அப்போது ரிங்கேஸ்வரனுக்கு வயது, 65 ஆவதாகவும், சரஸ்வதிக்கு, 59 வயது ஆவதாகவும் தெரிவித்தனர். தங்களுக்கு குழந்தை இல்லாததால் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், அப்படியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றனர். சரஸ்வதிக்கு, மாத விலக்கு நின்று, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. "எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதா, அதற்கான சிகிச்சையை உங்கள் மருத்துவமனையில் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்' என்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, சோதனை குழாய் சிகிச்சை மூலம் சரஸ்வதியின் கர்ப்பப் பையில், கருவூட்டப்பட்டது. பின் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையின் மூலமும், ஜனவரி மாதம் நடத்திய ஸ்கேன் பரிசோதனையின் மூலமும் கரு வளர்வது, உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து சரஸ்வதிக்கு, மிக கவனமாக மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனி மருத்துவக் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
சரஸ்வதிக்கு கடந்த, 28ம் தேதி ஆண் குழந்தை பிறந்து குழந்தை இரண்டேகால் கிலோ எடையுடன், ஆரோக்கியமாகவும் இருந்தது. தம்பதியருக்கும்,சிகிச்சை குழுவினருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது. எங்கள் மருத்துவமனையில், சோதனை குழாய் குழந்தை சிகிச்சை மூலம், ஆயிரக்கணக்கான தம்பதியர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு டாக்டர் செந்தாமரைச்செல்வி கூறினார்.

சரஸ்வதி - ரிங்கேஸ்வரன் தம்பதியர் கூறும் போது, ""திருமணமாகி 40 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், உறவினர்களாலும், சமுதாயத்தாலும் எங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலை, யாருக்கும் ஏற்பட்டிருக்காது. குழந்தை இல்லாத ஏக்கம் எங்களை தினம், தினம் இம்சித்தது. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பல மருத்துவமனைகளுக்கு சிசிக்சைக்கு சென்றும், எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. கடைசியில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்றதால் ஆண் குழந்தை பிறந்துள்ளது,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - jeddah,சவுதி அரேபியா
12-ஆக-201101:57:56 IST Report Abuse
rajan ஐயா எல்லோரும் குழந்தயின் எதிர்காலம் பற்றி பேசுஹிறர்கள் பிள்ளை இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி தயவு செய்து அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் எழுதவேண்டாம் மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் அந்த குழந்தையின் வாழ்நாள் சிறக்க பிள்ளை இல்லா தம்பதியான எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
pts - Lafayette,யூ.எஸ்.ஏ
12-ஆக-201101:26:02 IST Report Abuse
pts இங்கு கருத்து தெரிவித்திருப்பவர்கள் வயதை குறையாக சொல்லியிருக்க்ரார்கள். வயது என்ன அறுபது தானே. தம்பதிகள் இன்னும் 40 ஆண்டுகள் வாழ வேண்டும். குழந்தை பெற்ற சந்தோழத்தில்; குழந்தையை காரணம் காட்டி; சிறப்பாக வாழ வேண்டிய நிர்பந்தத்தில் தம்பதிகள் பலாண்டு வாழ்வார்கள். பேர குழந்தையும் பார்ப்பார்கள். நீங்கள் அனைவரும் வாழ வாழ்த்துகிறேன்.
Rate this:
Cancel
Maha Ganapathy - Minneapolis,யூ.எஸ்.ஏ
05-ஆக-201101:44:39 IST Report Abuse
Maha Ganapathy இத்தனை வருஷத்துல எவ்வளவு குழந்தைகளுக்கு உதவி பண்ணி இருக்கலாம்? இவங்க இரண்டு பேருக்கும் எதாவது ஆச்சுன்னா யாரு இந்த குழந்தைய பார்த்துக்குவாங்க? சரியான வயசுல தத்து எடுத்து இரண்டு குழந்தைகளுக்கு வாழ்வு கொடுத்து இருக்கலாமே? அறுபது வயசுல ரிலாக்ஸ்சான வாழ்க்கை வாழனும்... இப்போ இத்தனை ரேச்போன்சிபிளிட்டி இந்த வயசுல எதுக்கு? இந்தியால நிறைய குழந்தைகளுக்கு வீடு இல்லை, குடும்பம் இல்லை.. எதாவது சோசியல் சர்வீஸ் பண்ணி இருக்கலாமே...
Rate this:
Sugeandran Pathmanathan - London,யுனைடெட் கிங்டம்
06-ஆக-201109:39:59 IST Report Abuse
Sugeandran Pathmanathanசரி யான வாதம் .கரக்ட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X