இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு அவசியம்

Added : ஆக 04, 2011 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: "இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் மிகச்சிறந்த தீர்வு' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லிமென்டில்
SM Krishna, Political settlement, Lankan Tamil, War crime, 	இலங்கை தமிழர் பிரச்னை, அரசியல் தீர்வு ,

புதுடில்லி: "இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் மிகச்சிறந்த தீர்வு' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லிமென்டில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரச்னை குறித்து, அறிக்கை தாக்கல் செய்த போது, அதை முழுவதையும் படித்தார். ஆனால், நேற்று இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த அறிக்கையை, சபையில் முழுவதுமாகப் படிக்கவில்லை. மாறாக, வெறும் தாக்கல் மட்டுமே செய்யும்படி சபாநாயகர் உத்தரவிட்டதால், அதை ஏற்று தாக்கல் மட்டுமே செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசாங்கத்திற்கும், அங்குள்ள தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ் பிரதிநிதிகளுடன் நடத்தும் அந்த பேச்சுவார்த்தை, மிகுந்த ஒரு கட்டமைப்புடன் நடைபெற்று வருகிறது. இது போற்றத்தக்கது. அந்த பேச்சுவார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது. பேச்சுவார்த்தை நல்லதொரு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதற்காக, இந்தியா அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது. தமிழர்களின் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் ஒரே வழி என, இந்தியா கருதுகிறது. அதைநோக்கி அமைந்த நடவடிக்கைகளை, இந்தியா எப்போதும் ஆதரித்தே வந்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலை, அறிவியல் பண்பாட்டுத் தளங்களில், மிகுந்த தொடர்பும் நட்பும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இப்போது இந்த உறவு, நல்ல நிலையை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான, தொழில் வர்த்தக உறவுகளும் மேம்பட்டு வருகின்றன.
இலங்கை என்பது, பயங்கரவாதத்திற்காகப் பலியான நாடு என்றுகூட சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாகவே, அங்குள்ளவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டக்காரர்களுடன் போராடியே வந்த நாடு. போரினால் வீடிழந்து தவிக்கும் தமிழர்களுக்கு, வீடு கட்டித் தருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது. புனரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தையும், இந்தியா மிகுந்த வேகத்துடன் செய்திட, ஒத்துழைப்பையும் அளித்தது. அதோடு மட்டுமல்லாது, புனரமைப்பு நடவடிக்கைகளுக்காகவே 500 கோடி ரூபாய் வரை, அந்நாட்டு அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கியது. இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான, புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் மிகச்சிறந்த தீர்வு. போரினால் பாதிக்கப்பட்ட, 2 லட்சத்து 90 ஆயிரம் பேர், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திரும்பவும், அவரவர் இருப்பிடங்களிலேயே, குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் மீள் குடியமர்த்தப்படுவார்கள். போர்க்குற்றங்கள் குறித்து, ஐக்கியநாடுகள் சபையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து, இந்தியாவுக்கு தெரியும். இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது குறைந்துள்ளது. சமீபகாலமாக, எந்தவொரு மீனவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. தாக்குதல் நடத்தினால் , தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்நாட்டு அரசாங்கத்திடம், மத்திய அரசு மிகுந்த கண்டிப்புடன் கூறியுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 104 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் உள்ளனர். இலங்கை அரசாங்கத்திடம், ஒரு இந்திய மீனவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Lakeland,யூ.எஸ்.ஏ
06-ஆக-201101:19:24 IST Report Abuse
Saravanan "104 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் உள்ளனர். இலங்கை அரசாங்கத்திடம், ஒரு இந்திய மீனவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது" -இத்தனை நாட்களில் 500 க்கும் மேற்பட்ட (இந்திய) தமிழர்கள் பலி ஆனதற்கு என்ன பதில்? ஒரு அமைச்சர் இந்தியாவையோ இந்தியரையோ (இந்தியத் தமிழரை) பற்றிகூட கவலைபடவில்லை. மாறாக இலங்கைக்கு (சிங்களவனுக்கு) வக்காலத்து வாங்கும் ஒரு இந்திய அமைச்சர்..இவர் ஈழத்தமிழருக்கா மனமிரங்குவார்? தமிழன் அவ்வளவு அடிமுட்டாள் இல்லை..
Rate this:
Cancel
Prince - Chennai,இந்தியா
06-ஆக-201100:07:47 IST Report Abuse
Prince "இலங்கை அரசாங்கத்திடம், ஒரு இந்திய மீனவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. " இது எப்படி உங்ககிட்ட மாட்டினா ஜெயில். அவங்க கிட்டே மாட்டினா சங்கு தான். அப்புறம் எப்படி ஒரு இந்திய மீனவனும் இல்லைன்னு சொல்றீங்க? மாட்டின அத்தனை பேரையும் கொன்னுட்டாங்களே.. பிரதமர் மட்டும் தான் ரப்பர் ஸ்டாம்ப்-நு நெனச்சா மொத்த டீமும் அப்படிதானா?
Rate this:
Cancel
rajamohan.v - singapore,சிங்கப்பூர்
05-ஆக-201116:39:11 IST Report Abuse
rajamohan.v ஐ நா சபையில் இந்திய நாட்டின் அறிக்கைக்கு பதில் வேறு ஒரு நாட்டின் அறிக்கையை மாற்றி படித்து மானத்தை வாங்கிய நீ எல்லாம் ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்.....த்த்தூ......!
Rate this:
TAMILAN - Chennai,இந்தியா
05-ஆக-201117:08:48 IST Report Abuse
TAMILANஅப்படியா சொல்லவே இல்லை இது எப்ப நடந்தது? நீர் என்னதான் தூவானம் தூற்றினாலும் இவர் அதையும் வாழ்த்தாக ஏற்றுக்கொள்வார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X