சிறையிலிருந்து அன்பழகன் : சட்டசபைக்கு வந்தார்| anplagan on assembly from jail | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறையிலிருந்து அன்பழகன் : சட்டசபைக்கு வந்தார்

Added : ஆக 11, 2011 | கருத்துகள் (1)
Share
சென்னை : சிறையிலிருந்து, தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், நேற்று, சட்டசபைக்கு வந்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை அழைத்து வந்தனர். தென் சென்னை மாவட்ட தி.மு.க., செயலரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பழகனை, கடந்த 29ம் தேதி, பேப்பர் மில் அபகரிப்பு வழக்கில், திருப்பூர் போலீசார் கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சட்டசபை
சிறையிலிருந்து அன்பழகன் : சட்டசபைக்கு வந்தார்

சென்னை : சிறையிலிருந்து, தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், நேற்று, சட்டசபைக்கு வந்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை அழைத்து வந்தனர். தென் சென்னை மாவட்ட தி.மு.க., செயலரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பழகனை, கடந்த 29ம் தேதி, பேப்பர் மில் அபகரிப்பு வழக்கில், திருப்பூர் போலீசார் கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கும்படி, சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார். அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்டு, சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஐகோர்ட் அனுமதி வழங்கியது. நேற்று காலை, புழல் ஜெயிலில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார், அன்பழகனை சட்டசபைக்கு அழைத்து வந்தனர். லாபியில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். பின் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ""கோர்ட் உத்தரவின்படி சட்டசபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளேன். சட்டசபையில் ஒரே பகுதியில் இடம் ஒதுக்கும் வரை சபை நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்ற கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று, சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை,'' என்றார். ஜாமின் கிடைத்தது: இதற்கிடையே, அன்பழகன், ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு, நீதிபதி ராஜசூர்யா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அன்பழகன் சார்பில், வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜரானார். அன்பழகனுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டார். மூன்று நாட்களுக்கு, திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் அன்பழகன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார். சென்னை போலீசில் புகார் கூறப்பட்ட மற்றொரு வழக்கில், முன்ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X