அரசியல் செய்தி

தமிழ்நாடு

"முதல்வர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அழைக்க வேண்டும்'

Added : ஆக 11, 2011 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை : ""முதல்வர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அழைக்க வேண்டும்,'' என்று சட்டசபையில் உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் பேசியதும், முதல்வர் உட்பட உறுப்பினர்களும் சிரித்தனர். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, ""கன்னியாகுமரியிலிருந்து களியக்காவிளைக்கு மேற்கு கடற்கரை சாலை வழியாக பஸ் இயக்கப்படுமா? என்ற கேள்வியை, உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ""சட்டசபையில் பேசும் உறுப்பினர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார் என பேசுகின்றனர். இனிமேல் யாரும் அப்படி பேசாமல், நிரந்தர முதல்வர் என்று தான் பேச வேண்டும்,'' என்றார். அப்போது முதல்வர் ஜெயலலிதா உட்பட உறுப்பினர்களும் சிரித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசியதாவது: மேற்கு கடற்கரை சாலையை இணைத்து மணக்குடி முதல் நீரோடி வரை மூன்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி கீழமணக்குடி பாலம் சுனாமியால் சேதமாகி விட்டதால், கன்னியாகுமரியிலிருந்து பஸ் இயக்க முடியாத நிலை உள்ளது. பாலம் வேலை முடிந்தவுடன் மேற்கு கடற்கரைச்சாலை வழியாக கன்னியாகுமரி - களியக்காவிளைக்கு பஸ் இயக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shabaaz - Vellore,இந்தியா
11-ஆக-201107:19:37 IST Report Abuse
Shabaaz உண்மையிலேயே சிரிப்பு தான் வருகிறது. கூடவே அழுகையும் வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
vennai govindan - nochikuppam,யூ.எஸ்.ஏ
11-ஆக-201107:19:35 IST Report Abuse
vennai govindan நீங்கள் சொன்னது நிஜம் தான் அம்மா ஆட்சி நடத்துற திறமைய பார்த்து தேர்தல் ஆணையம் தமிழகதில் தேர்தலை நிரந்தரமாக ரத்து செய்து விட்டு அம்மாவை நிரந்தர முதல்வராக நியமிக்கலாமா என்று யோசிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
saravanan - kanchipuram,இந்தியா
11-ஆக-201107:11:34 IST Report Abuse
saravanan உங்க வயசு என்ன ? இன்னும் எத்தனை வயசுக்கு உயிரோடு இருப்பிங்க ..... அப்புறம் எப்படி நிரந்தர முதல்வர் ?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X