ரூ.37 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள்

Added : ஆக 11, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: "ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க, கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.37 ஆயிரம் கோடிக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என, ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2004-11ம் ஆண்டுகளில் பல்வேறு விதமான ராணுவ தளவாடங்கள், ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு

புதுடில்லி: "ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் வாங்க, கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.37 ஆயிரம் கோடிக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என, ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2004-11ம் ஆண்டுகளில் பல்வேறு விதமான ராணுவ தளவாடங்கள், ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், சி130 ஜே விமானம், வி.வி.ஐ.பி., பயணிப்பதற்கான போயிங் விமானம் ஆகியவையும் அடங்கும். 10சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானம் மற்றும் அதனுடன் இணைந்த கருவிகள் வாங்க, கடந்த ஜூன் 14ம் தேதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி. இந்த விமானம், 2013ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagaraj - madurai ,இந்தியா
11-ஆக-201107:11:01 IST Report Abuse
nagaraj அமெரிக்கா நம்மிடம் ஆயுதங்களை விற்றுவிட்டு.........பணத்தைப் பாகிஸ்தானிடம் கொடுப்பான்.......
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-ஆக-201103:58:00 IST Report Abuse
மதுரை விருமாண்டி "வி.வி.ஐ.பி., பயணிப்பதற்கான போயிங் விமானம்" - ஒத்தை ஆள், சோனியா போறதுக்கு இவ்வளோ பெரிய செலவா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X