சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடுகளை தடுத்தால் தமிழக பொருட்களை தடுப்போம் :கேரளா மாட்டு வியாபாரிகள் எச்சரிக்கை

Added : ஆக 11, 2011
Advertisement

ஈரோடு: ""லாரியில் மாடுகளை கொண்டு செல்வதை தடுத்தால், தமிழகத்தில் இருந்து வரும் பிற பொருட்களை கேரளாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவோம்,'' என, ஈரோடு மாட்டு சந்தையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கேரள மாநில மாடு வியாபாரிகள் சங்க செயலாளர் யூசுப் பேசினார்.தமிழகத்தில் ஈரோடு, அந்தியூர், வேலூர், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், காங்கேயம், தர்மபுரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிரபல மாட்டுச்சந்தைகள் கூடுகின்றன. ஈரோடு கருங்கல்பாளையத்தில், 25 ஆண்டுகளுக்கு மேலாக, புதன், வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடக்கிறது. புதன்கிழமை நடக்கும் அடிமாட்டு சந்தையில், 4,000 மாடுகள் வரை விற்பனையாகின்றன. இவற்றை அதிகளவில் கேரள வியாபாரிகளே வாங்கிச் செல்கின்றனர்.லாரியில் கொடூரமான முறையில் கொண்டு செல்லப்படும் மாடுகளை, விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள், ஹிந்து அமைப்புகள் தடுத்து நிறுத்துகின்றன. மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், லாரி டிரைவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர். மாடுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வழியாக, நேற்று முன்தினம் இரவு இரண்டு லாரிகளில், கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆத்திரமடைந்த மாட்டு வியாபாரிகள், நேற்று ஈரோடு மாட்டு சந்தையில் கூடினர். மாடுகள் கொண்டு செல்வதை காலவரையின்றி நிறுத்துவது என முடிவு செய்தனர். கேரள மாட்டு வியாபாரிகளுடன், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகளும் கைகோர்த்தனர்.நேற்றைய ஆலோசனைக் கூட்டம் தமிழக கால்நடை வியாபாரிகள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கேரள மாநில மாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் பர்மராஜன் முன்னிலை வகித்தார். செயலாளர் யூசுப் பேசியதாவது:ஜூலை 25ம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் 8ம் தேதி வரை, ஏழு லோடு மாடுகளை மடக்கிய போலீஸார், 50 மாடுகளை ஈரோடு, சாவடிபாளையம் கோசாலைக்கும், 131 மாடுகளை கோவை மாவட்டம் மைலேரிபாளையம் கோசாலைக்கும் ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து கறிக்கோழி, முட்டை, மாடுகள், காய்கறிகள், அரிசி, உணவு தானியங்கள் போன்றவை, லாரிகள் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாடுகளை போல கறிக்கோழியும் இறைச்சியே. ஆனால், அதை மட்டும் போலீஸாரோ; மற்றவர்களோ கண்டுகொள்வதில்லை.தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கேரளா வியாபாரிகள் அனைவரும் ஒன்று கூடி, எங்கள் குடும்பத்தினருடன், செக்போஸ்ட்டில் அமர்ந்து, தமிழகத்தில் இருந்து வரும் லாரிகளை கேரளாவுக்குள் நுழைய விட மாட்டோம். ஈரோட்டுக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X