கர்ப்பிணியிடம் வசூலித்த ரூ.37 ஆயிரம்; திருப்பி அளிக்க அரசு டாக்டருக்கு உத்தரவு

Added : ஜன 02, 2022 | கருத்துகள் (3)
Advertisement
திருப்பூர்--'கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்' என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் சிசு இறந்து விட்ட நிலையில், பணியில் இருந்த டாக்டர்
 கர்ப்பிணியிடம் வசூலித்த ரூ.37 ஆயிரம்;  திருப்பி அளிக்க அரசு டாக்டருக்கு உத்தரவு

திருப்பூர்--'கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்' என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் சிசு இறந்து விட்ட நிலையில், பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி அலட்சியம் காட்டியுள்ளார். அதிர்ச்சிபின், தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இறந்த நிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது.

இந்த சிகிச்சையை மேற்கொண்டது அரசு டாக்டர் ஜோதிமணி என்பதை அறிந்து, பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார்; திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் புகார் அளித்தார். கலெக்டர் நடவடிக்கையின்படி, கட்டணம் பெறும் நோக்கில், நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜோதிமணி, நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், ''கர்ப்பிணியிடம் பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாயை, டாக்டர் ஜோதிமணி திருப்பி அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்

.கலெக்டர் மேலும் கூறிய போது, 'சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'டாக்டர் ஜோதிமணி மீது துறை சார்ந்த விசாரணையும் நடந்து வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
03-ஜன-202215:10:18 IST Report Abuse
Swaminathan Chandramouli போலீஸ்காரர்கள் எந்த குற்றமும் செய்தாலும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்குபோடப்பட்டு தண்டனை அனுபவித்ததே இல்லை துறை ரீதியாக எப்படி கையாள்வது என்று மேலதிகாரிகள் தீர்மானம் செய்வார்கள், இப்போது டாக்டர்கள் விஷயத்திலும் சிறை வாசமோ , அபராதமோ வேறு தண்டனைகளோ கொடுப்பதில்லை லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் போதும் கதை முடிந்தது . செந்தில் பாலாஜி சுருட்டிய பணத்தை புகார்தார்களுக்கு திருப்பி கொடுத்து விட்டேன் என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்து தப்பித்து விட்டார் சாமர்த்தியமான பேர்வழி
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
03-ஜன-202213:57:07 IST Report Abuse
Ramalingam Shanmugam நம்ம மந்திரிக்கு ஒரு நியாமா கொன்னா பாவம் தின்னா போச்சு
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
03-ஜன-202210:32:02 IST Report Abuse
V.B.RAM 37 ஆயிரம் ரூபாயை, டாக்டர் ஜோதிமணி திருப்பி அளிக்க வேண்டும் இல்லாவிட்டால்,?? இது என்ன நடவடிக்கை. இதுதான் மற்றவர்களை தவறு செய்ய தூண்டுகிறது.மாட்டினால் பார்த்துக் கொள்ளலாம் என்று.ஏன் வேலையே விட்டு தூக்க கூடாது. டான்சி நிலத்தை திருப்பிக்கொடுத்து ஜெ தப்பித்துக்கொண்டார்.பாலாஜி வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்து தண்டனையிலிருந்து தப்பித்து கொண்டார். நாளைக்கு திருடன் திருடியதை ( மாட்டினால் )திருப்பிக்கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X