குண்டு வெடிப்புகளை விட கங்கை நதி நீரால் அதிகம் பேர் உயிரிழப்பு: அத்வானி கவலை

Added : ஆக 14, 2011 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி : ""குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி உயிரிழப்பவர்களை விட, மாசுபட்ட கங்கை நதி தண்ணீரைப் பயன்படுத்துவதால், அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன் இணையதளத்தில் கூறியுள்ளதாவது: கங்கை நதி நீர் மாசுபடுவது, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது, கவலை தரும் விஷயம். கங்கை நதியின்
குண்டு வெடிப்புகளை விட கங்கை நதி நீரால் அதிகம் பேர் உயிரிழப்பு: அத்வானி கவலை

புதுடில்லி : ""குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி உயிரிழப்பவர்களை விட, மாசுபட்ட கங்கை நதி தண்ணீரைப் பயன்படுத்துவதால், அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன் இணையதளத்தில் கூறியுள்ளதாவது: கங்கை நதி நீர் மாசுபடுவது, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது, கவலை தரும் விஷயம். கங்கை நதியின் கரையோரங்களில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், மாசுபட்ட கங்கை நதி நீரைப் பயன்படுத்துவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புச் சம்பவங்களில், குறைவான எண்ணிக்கையில் தான் உயிர்ப் பலிகள் நிகழ்கின்றன.

இது, உலக அளவில் பெரிய செய்தியாக வெளியிடப்படுகிறது. ஆனால், மாசுபட்ட கங்கை நதி நீரை பயன்படுத்துவதால், பெரும் எண்ணிக்கையில் உயிர்பலி நிகழ்கிறது. அது, வெளியில் தெரியாமல் போகிறது. இந்த நிலை மாற வேண்டும். நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற காரணங்களால், கங்கை நதி தொடர்ந்து அசுத்தமடைகிறது. இது குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாததால், காசி போன்ற இடங்களில், மக்கள் நீராடி வருகின்றனர். கங்கை ஆற்றுப் படுகைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களாலும், மக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

எனவே, கங்கை நதியைச் சார்ந்து வாழும், நதியோர கிராம மக்களுக்கு, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை, சுத்தமான குடிநீர் மற்றும் வீட்டிற்கு ஒரு மரம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், கங்கை நதி நீர் மாசுபடுவதை தடுப்பதோடு, மாசடைந்த நீரால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க முடியும். இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
டான் - நாகர்கோயில்,இந்தியா
16-ஆக-201100:32:31 IST Report Abuse
டான் வங்கக்கடலினுள் வீணாகும் கணக்கில்லா கங்கை நீரை தண்ணீருக்கு திண்டாடும் இந்திய பகுதிகளுக்கு மாற்றிவிட்டாலே நாடு நன்மையடையும் கங்கையும் பொலிவுறும். - இக்ஸாப், நாகர்கோயில்
Rate this:
Cancel
Shunmuga Anandam - Coimbatore,இந்தியா
15-ஆக-201117:52:18 IST Report Abuse
Shunmuga Anandam அத்வானி கொஞ்சம் தெளிவா பேசிட்டாரு.. ஏதோ சொன்னாலும் கொஞ்சம் முக்கியமான அக்கறைகாட்ட வேண்டிய ஒரு பிரச்சனை தான். பாக்கலாம் இத தொடர்ந்து வழியுறுத்துவாரானு..
Rate this:
Cancel
ibrahim - doha,கத்தார்
15-ஆக-201115:10:28 IST Report Abuse
ibrahim I like this
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X