பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக எல்கை பகுதியில் சாலைகளில் கொட்டப்படும் கேரள கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

Added : ஆக 20, 2011
Advertisement

குற்றாலம் : கோட்டைவாசல் முதல் இலஞ்சி வரை சாலைகளில் கொட்டப்படும் கேரள கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் முக்கியமான எல்லை பகுதிகளில் நெல்லை மாவட்டம் கோட்டை வாசலும் ஒன்று. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான இந்த எல்லை பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், வாகனங்கள் கேரளாவிற்கு செல்வதும், திரும்பி வருவதுமாக உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வாழைத்தார், மரத்தூள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் தமிழக லாரிகள் கேரளாவில் சரக்குகளை இறக்கிவிட்டு வரும் வழியில் அம்மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள், மக்காத குப்பைகள், மாடு, கோழி கழிவுகள், மீன் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவைகளை ஏற்றி தமிழக எல்கை பகுதியான கோட்டைவாசல், தாட்கோநகர், புதூர், செங்கோட்டை, இலஞ்சி, குண்டாறு, சிலுவை முக்கு பகுதிகளில் சோதனை சாவடிகளை தாண்டி வந்து நள்ளிரவில் கொட்டி செல்கின்றனர்.இலஞ்சி குண்டாற்றின் கரை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதால் தண்ணீரும் மாசுபடுகிறது. குப்பைகளும் காற்றில் பறந்து சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.இது சம்பந்தமாக பஞ்.,கள் மூலம் புகார் செய்யப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேரளாவில் எந்த கழிவுகளையும் சாலை ஓரங்களில் கொட்டினால் ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட விதி அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழக எல்கை பகுதிகளில் கொட்டி செல்கின்றனர்.தற்போது கேரள மாநில கழிவுகளால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்ட நிர்வாகம் இதற்கு முற்றிலும் தடைவிதித்து வாகன ஓட்டிகள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். தமிழக எல்கை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து கழிவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்பவோ அல்லது அவர்கள் மீது துறை ரீதியாகவோ நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழக எல்கை பகுதிகளில் நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை தடுக்க முடியும்.இதை உடனே செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X