Caste names in villages removed: TN Govt., | ஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை

Updated : ஆக 22, 2011 | Added : ஆக 22, 2011 | கருத்துகள் (12)

திண்டுக்கல்: ஊர்களில் ஜாதி பெயரை நீக்கி, அழகுத் தமிழ் பெயர் சூட்ட, அரசு முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் பல கிராமங்கள், ஜாதி பெயரில் உள்ளன; இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்கள் சில சமுதாயத்தினரை புண்படுத்துவதாக உள்ளன. இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ் பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது.இதற்கு, அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும்.


அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தீண்டாமை சட்டத்தில், ஜாதியின் பெயரை சொல்லி அழைப்பது குற்றம். ஆனால் சில ஊர்களுக்கு அது தொடர்பான பெயர்கள் உள்ளன. முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X