பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்ரமிப்பு கோவில் நிலங்களை மீட்கணும்: மதுரை ஆதீனம் கருத்து

Added : ஆக 23, 2011
Share
Advertisement

கும்பகோணம்: ""தமிழகத்தில் திருக்கோவில் நிலங்களை யார் ஆக்ரமிப்பு செய்திருந்தாலும் அதை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்,'' என மதுரை ஆதீனம் தெரிவித்தார். மதுரை ஆதீனம் 292ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று கும்பகோணத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களில் கும்பகோணம் அருகே குருதலமாக போற்றப்படும் திருப்புறம்பியம் சாட்சிநாதசுவாமி சுவாமி திருக்கோயில் திருப்பணி ஒரு கோடியில் நடைபெற்றிருக்கிறது. மேலும் ஒன்றரை கோடிக்கு திருப்பணி செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உபயதாரர்கள் முன்வரவேண்டும். செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. அன்றைய தினம் இக்கோவிலில் பிரளயங்காத்த விநாயகருக்கு தேனபிஷேகம் நடக்கிறது. கஞ்சனூரில் அன்னதானம் கூடத்திற்கு மேல் யாத்ரீகர் நிவாஸ் கட்டப்படும். அனைத்து பணிகளுமே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும். அன்னாõஹாசரே போராட்டம் நியாயமானது வரவேற்கத்தக்கது. நாட்டில் ஊழலற்ற, லஞ்சமில்லாத நாடாக வரவேண்டும் என்ற அவரது கருத்தை முழுமையாக நாம் ஆதரிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் நிலையை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தை செம்மையாக ஆக்க பெரிய விழிப்புணர்வை நாட்டில் உள்ள மக்களிடம் அன்னாஹாசரே பரப்பியுள்ளார். தமிழகத்தில் புதிய தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும்' என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். டில்லி மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணையாக அங்கு மருத்துவமனை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் திருக்கோவில் நிலங்களை யார் ஆக்ரமிப்பு செய்திருந்தாலும் அதை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். குத்தகை சரியாக அளக்காதவர்களிடம் இருந்து மீட்கவேண்டும். இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X