புதுடில்லி: தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கே. ரோசய்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோல் கேரள மாநில கவர்னராக, ஜார்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் எம் ஓ எச் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச கவர்னராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நரேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் கவர்னர் சையத் அகமது ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.புருஷோத்தமன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில கவர்னர் கே சங்கரநாராயணன் கோவா மாநில கவர்னர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE