அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி

Updated : ஆக 27, 2011 | Added : ஆக 26, 2011 | கருத்துகள் (85)
Share
Advertisement
Death penalty, Karunanidhi, Rajiv assassin, கருணாநிதி, தூக்கு தண்டனை,

மனிதாபிமானத்தோடு, மறப்போம், மன்னிப்போம் என்ற நிலையில், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையிலிருந்து, காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். .

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: "தூக்கு தண்டனையே கூடாது' என, நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். அந்தக் கருத்து, ராஜீவ் கொலை குற்றவாளிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவருமே, 20 ஆண்டுகள் சிறையிலேயே இருந்து விட்டனர். அவர்கள் செய்தது குற்றமே ஆயினும், இத்தனை ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்ததை மனதில் கொண்டு, மனிதாபிமானத்தோடு, மறப்போம், மன்னிப்போம் என்ற நிலையில், உலகெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் விடுக்கின்ற வேண்டுகோளினை ஏற்று, தூக்கு தண்டனையிலிருந்து, அவர்களை காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை எல்லாம், மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம், உருக்கத்தோடு அவர்கள் மூவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டுமென விடுத்துள்ள வேண்டுகோளை புறக்கணிக்காமல், இரக்கச் சிந்தனையோடு இதை அணுகிட வேண்டும். மத்திய அரசை ஆளும் பிரதான கட்சியான காங்கிரசும், அதன் தலைவர் சோனியாவும் இப்பிரச்னையில், அக்கறையோடு செயல்பட்டு, மூன்று உயிர்களையும் காப்பாற்ற முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். முடிவெடுக்க சில நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் இப்பிரச்னையில், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Beni. D - Dammam,சவுதி அரேபியா
28-ஆக-201102:12:07 IST Report Abuse
Beni. D என்னய்யா....................நித்தம் நித்தம் கொல்லப்பட்டு வரும் நம் மீனவர்களுக்காக ஒருவனும் இதுவரை ஒற்றுமையாய் குரல் கொடுக்கவில்லை.....பிரதமரையே நமது தமிழ் நாட்டில் வைத்து கொன்றவன் அவன் உயிருக்காக இவ்வளவு ஒற்றுமை உங்களுக்குள் தேவயா...............இதுல இவர்கள் தமிழர்களாம்.. சொல்ல கேவலமாயில்ல................ இருபது ஆண்டுகள் இவர்களை எல்லாம் வாழவிட்டதே பெரிய குற்றம்,ஒரு நாட்டின் பிரதமரை குண்டு வைத்து தகர்த்தவன் எல்லாம் உலகின் மிக பெரிய தீவிரவா...தி. அதுனால நீர் போய் கத எழுதுற வேலய பாரும்...........
Rate this:
Cancel
Jeeva - Surat,இந்தியா
28-ஆக-201100:21:54 IST Report Abuse
Jeeva மஞ்ச துண்டாரே ஜன லோக்பால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது... இனிமேல் உன் குடும்பம் தீகாரிலோ, பாளையம்கொட்டையிலோ, வேலூரிலோ..
Rate this:
Cancel
Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-ஆக-201100:05:34 IST Report Abuse
Matt pillai வை கோ சொன்னார் ....ராமடோசும் சொன்னார்...கிருஷ்ண சுவாமி வெளிநடப்பு செய்தார்.....பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று.....இப்போது கருணாநிதி சொல்கிறார்..Thamilzhnaatilulla தமிழ் ...congressum ...பிஜேபி யும் வாய் திறக்கவில்லை...அவர்களும் தமிழர்கள் தான்.....மரண வேதனை என்று ஓன்று இருந்தால்....அது ராஜிவுக்கும் இவர்களுக்கும் ஓன்று தான்..... எல்லாம் நடந்த பின் இப்போது அழுது என்ன பிரயோஜனம்,?.....மனிதனை மனிதனே கொல்வது இந்த நூற்றாண்டிலும் நடப்பது,அதுவும் புத்தன் காந்தி பிறந்த மண்ணில்..!! .வேதனைகுரியது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X