சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த பிள்ளையார் கோவில் இடிப்பு

Added : ஜூலை 01, 2010 | கருத்துகள் (1)
Advertisement

திருச்சி: திருச்சி உறையூரில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த பழமையான சாலை பிள்ளையார் கோவில் மாநகராட்சி நிர்வாகத்தால் நேற்று இடிக்கப்பட்டது.


திருச்சி மாநகரில் போக்குவரத்து வசதி அதிகரிக்க சாலைகளை அகலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு வசதியாக மாநகரில் ரோட்டின் ஓரத்தில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வழிபாட்டுதலங்களை மாநகராட்சி நிர்வாகம் இடித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியை செய்து வருகிறது. நேற்று உறையூரில் கடந்த 70 ஆண்டுகளாக இருக்கும் சாலை பிள்ளையார் கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவிலை இடிக்க துவங்கும் முன் பக்தர்களே அங்கிருந்த பிள்ளையார் சிலையை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். அதே பகுதியில் இருந்த மற்றொரு பிள்ளையார் கோவிலையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்தனர். இதையொட்டி உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SM - Doha,கத்தார்
01-ஜூலை-201013:59:00 IST Report Abuse
SM I am also a HINDU and one of the true devotees of Lord Vinayaga... Whenever I have travelled through this Salai road, I have thought of demolishing that temple, as it is encroaching the road...and ..during the festival season, it is a nuisance to the public...Temple should be constructed in a convenient / peaceful / devine places... I congratulate & welcome such initiatives....Good work done.. SM - Doha, Qatar.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X