சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் லஞ்சம்: வருமான வரித்துறை அதிகாரி கைது

Updated : ஆக 30, 2011 | Added : ஆக 30, 2011 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: சென்னை தலைமை வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் கூடுதல் வருமான வரித்துறை அதிகாரி ரவீந்திரா என்பவர், சோதனையில் சிக்கும் சொத்து விபரத்தை குறைத்து மதிப்பீட 5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார். இதன் பின்னர் 50 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதனையடுத்து 50 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது, ரவீந்திராவையும், பணம் கொடுத்த தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரியும் கிஷோர்குமார் என்பவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். வருமான வரி சோதனையில் தனியார் நிறுவனம் 116 கோடி கோடி ரூபாய் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை 56 கோடியாக குறைக்க 50 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சப்பணத்தை ரகசிய இடத்திற்கு கடத்த முயன்ற போது ரவீந்திரா பிடிபட்டுள்ளார் . பணத்தை கடத்த உதவிய உத்தம்சந்த் போரா என்பவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayagopal - Chennai,இந்தியா
31-ஆக-201121:36:49 IST Report Abuse
Jayagopal இந்த நாடு அதிவேகமாக முன்னேற்றபதையில் செல்லும் சக்கரங்களாக உதவும் பல நிறுவனங்களில் சிலர் வேகதடைகளாகவும் திகழ்கின்றனர்.நேர்மையாக வரி செலுத்தினால் அது வேறு ரூபத்தில் சுவிஸ் வங்கிக்கு செல்கிறது,இது நேர்வழியில் செல்கிறது சுவிஸ் வங்கிக்கு.கடவுள் நினைத்தாலும் நம் பணத்தை காப்பாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X