சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்

Updated : ஆக 31, 2011 | Added : ஆக 30, 2011 | கருத்துகள் (21)
Advertisement
வருமான வரி, ரூ.50 லட்சம் லஞ்சம்,  educational institution, bribe, Tax evasion,

சென்னை:வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்.சென்னை, பெருங்குடியில், "எவரான் எஜுகேஷன் லிட்' என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார்.


அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கி÷ஷார் , 49, என்பவர், 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார். இதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கி÷ஷார், வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார்.தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கி÷ஷாரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது.தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.


இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இயக்குனர் கி÷ஷார், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர்.அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கி÷ஷார், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்.


இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.


மினி பாரும், மருந்துக் கடையும்!ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.அடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர்.


கைது படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான," செட்டப்' இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, "ஊட்டச்சத்துக்கான' மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன.
இவற்றை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது. -கி.கணேஷ்-


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-செப்-201112:45:09 IST Report Abuse
மதுரை விருமாண்டி நண்பர்: "என்ன ஆச்சு ?" - நான்: "நான் எழுதி நேற்று பிரசுரமான கருத்து இன்னைக்கி காணாமப் போச்சு..!!!" நண்பர்: "அப்போ, சி.பி.ஐ கிட்டே சொல்லுங்க..!!!"
Rate this:
Share this comment
Cancel
UllalEthiri - Chennai,இந்தியா
01-செப்-201100:02:58 IST Report Abuse
UllalEthiri திருட்டு கூட்டம், இந்த வரி கட்டியிருந்தால் அரசாங்க பணியாளர்களின் சம்பளம் கூட உயர்ந்து இருக்கலாம், இவர்களால் நல்ல அரசாங்க உழியர் கூட கெட்டு போக வாய்பு உள்ளது, உடனடியாக பனி நீக்கம் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
padmanabhan potti - Suchindrum,இந்தியா
31-ஆக-201121:55:57 IST Report Abuse
padmanabhan potti வெளியே பயிரை மேய்ந்த கதையாக் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X