புதுடில்லி:கருப்பு பணப் புழக்கத்தை ஒழிப்பது குறித்து ஆராய, குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், இது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
கூறியதாவது:கறுப்பு பண விவகாரம் குறித்த வெள்ளையறிக்கையைத் தயாரிக்கும்
எண்ணம் அரசுக்கு இல்லை. தேசிய அளவில் உள்ள மூன்று கல்வி மையங்கள் மூலம்,
கறுப்பு பணம் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய நிதி
மேலாண்மை மையம் உள்ளிட்ட, இந்த மூன்று ஆராய்ச்சி நிறுவனங்கள், கறுப்பு பணப்
புழக்கம் குறித்த தங்கள் ஆய்வை, 18 மாதங்களில் சமர்ப்பிக்க உள்ளன.கறுப்பு
பண நடமாட்டம், அது வெளிநாட்டுக்குச் செல்லும் விதம் போன்றவற்றைத் தடுப்பது,
இதற்கு ஏற்ற சட்டங்களை இயற்றுவது குறித்து, மத்திய நேரடி வரி வாரியத்
தலைவர் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஆறு
மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.இவ்வாறு, பிரணாப் முகர்ஜி
கூறினார்.நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் குறிப்பிடுகையில், "கடந்த
2008ம் ஆண்டு முதல் நடத்திய அதிரடி சோதனைகள் மூலம், வருமான வரித்துறை 2
ஆயிரத்து 289 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க,
அரசு ஐந்து அம்ச யுக்தியை பயன்படுத்தி வருகிறது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE