அப்சல் குருவை காப்பாற்ற முயற்சி துவக்கம் ; தமிழகத்தை போல காஷ்மீரிலும் தீர்மானம் ?

Updated : செப் 01, 2011 | Added : செப் 01, 2011 | கருத்துகள் (89)
Share
Advertisement
அப்சல் குருவை காப்பாற்ற முயற்சி துவக்கம் ; தமிழகத்தை போல காஷ்மீரிலும் தீர்மானம் ?

ஜம்மு: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் தமிழக சட்டசபை தீர்மானம் போல பார்லி., தாக்குதலில் தொடர்பான குற்றவாளி அப்சல்குருவின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வர ஜம்மு காஷ்மீரில் சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக சட்டசபையில் , ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தமிழக மக்களின் உணர்வுக்காக தாம் வலியுறுத்துவதாக முன்மொழிந்து பேசிய முதல்வர் ஜெ., தெரிவித்தார். இதற்கு மாநிலத்தில் ஒரு சாரார் ஆதரவும், மற்றொரு புறம் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ.,வும் மனித உரிமைக்கு குரல் கொடுப்பவருமான ஷேக் அப்துல் ரசீத் சட்டசபை செயலரிடம் 2 தீர்மானங்கள் கொண்டு வரவேண்டும் என கடிதம் கொடுத்துள்ளர். இது குறித்து இவர் கூறுகையில்., நான் மரணத்தண்டனைக்கு எதிரானவன், கொல்வது மூலம் நாட்டை சீர்திருத்த முடியாது எனவே மக்களை கொல்வதை நான் விரும்பவில்லை.

அப்சல் குருவை தூக்கில் இருந்து விடுவித்து மன்னிப்பு கோருவது, இது தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என 2 தீர்மானம் கொண்டு வர கேட்டுக்கொண்டுள்ளேன். ‌செப்., மாத இறுதியில் துவங்கும் சட்டசபையில் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்படும் என நம்புகிறேன். முதல்வர் உமர் அப்துல்லா இதற்கு துணை நிற்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த பெரும் விவாதம் உமருக்கு பெரும் சோதனையாக இருக்கும். இவ்வாறு ரசீத் கூறினார்.


மாநிலத்தில் உள்ள முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் கூறுகையில்; அப்சல் குருவின் தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்து விட்டோம். இதுவே எங்கள் நிலை என்றார். ஒமரின் டூவீட்டரில் தெளிவான கருத்து எதுவும் இல்லை. அவர் ஒரு தெளிவான முடிவுக்கு வரட்டும் என்றார்.


அப்சல் குரு தொடர்பான எந்த தீர்மானம் ஆனாலும் பா.ஜ., எதிர்க்கும் என காஷ்மீர் மாநில பா.ஜ., தலைவர் மன்ஹாஸ் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவன் ஒரு சதிகாரன், குற்றம் புரிந்துள்ளான் என்பது கோர்ட் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்றார்.


ஹூரியத் மாநாட்டு கட்சி செய்தி தொடர்பாளர் சையது சலீம் கிலானி கூறுகையில்: நாங்கள் சட்டசபையை ஏற்கவில்லை. அதே நேரத்தில், காஷ்மீர் அரசு தமிழ்நாட்டின் அரசை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு மக்களின் பிரதிநிதியாக தனது கடமையை செய்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.


தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்; பார்லி., வளாக தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை முதலில் தூக்கில் போட வேண்டும் மற்ற விஷயங்களை பிறகு பேசலாம் என்றார்.


காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தனது டூவிட்டரில் , அப்சல் குருவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினால் சும்மா இருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை என கூறியிருந்தார். இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shafi - Chennai,இந்தியா
03-செப்-201112:08:22 IST Report Abuse
Shafi மரண தண்டனையை எதிர்க்கும் போக்கில் மதம் தடையாய் இருக்க வேண்டாம். (அப்பாவிகள் விஷயத்தில் ) அனைவருக்காகவும் குரல் கொடுப்போம் .
Rate this:
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
02-செப்-201110:39:17 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாகிவிட்டதற்கு இதை விட ஒரு எடுத்துக்காட்டு தேவையா? தமிழகம் ஒரு பாதுகாப்பான தாயின் கையில் இருக்கிறது. ஒவொவொரு தமிழனும் இதை இந்த நூறு நாள் நல்லாட்சியில் உணர்ந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
Rate this:
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
02-செப்-201109:54:53 IST Report Abuse
itashokkumar இப்போ தெரியுதா இப்போ தெரியுதா. நான் சொன்னது நடக்குதா இல்லையா. நான் எழுத்தாளர் சுஜாதா வின் ரசிகர். நடக்கும் என்றல் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X