கோவில் கருவறை கதவில் வடகலை நாமத்திற்கு எதிர்ப்பு | கோவில் கருவறை கதவில் வடகலை நாமத்திற்கு எதிர்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் கருவறை கதவில் வடகலை நாமத்திற்கு எதிர்ப்பு

Added : செப் 02, 2011
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலின் கருவறை வெள்ளிக் கதவில், வடகலை நாமம் பொறிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியின்றி வடகலை, தென்கலை தொடர்பாக எதையும் சேர்க்கக் கூடாது, என்ற அரசின் உத்தரவு உள்ளது. இதை மீறி கடந்த மாதம் 25ம் தேதி, கோவிலின் கருவறையில் வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. சங்கு சக்கரம் சின்னங்களுடன் உள்ள கதவில், வெள்ளியிலான வடகலை நாமம் திடீரென பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள யதீந்த்ர ப்ரவண சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவிலின் அறிவிப்பு பலகையில் இதுகுறித்து முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல், கடந்த மாதம் 25ம் தேதி மாலை பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், மாலையில் ரகசியமாக வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. எவ்வளவு கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது, யார் இந்த வெள்ளிப் பொருட்களை நன்கொடையாகக் கொடுத்தது என்ற அறிவிப்பின்றி இந்த கதவு பொருத்தப்பட்டுள்ளது.

இக்கதவு செய்தது போக மீதமுள்ள வெள்ளிப் பொருட்களை, கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் சுருட்டியிருப்பார்களோ, என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. புதிதாக பொருத்தப்பட்டுள்ள வெள்ளிக் கதவில் உள்ள வடகலை நாமத்தை அகற்ற முற்பட்டபோது, அங்கிருந்த அர்ச்சகர்கள் அதைத் தடுத்துவிட்டனர்.

அறநிலையத்துறை ஆணையர் போனில் உத்தரவிட்ட பின்னும், அந்த நாமத்தை அகற்ற அர்ச்சகர்கள் மறுத்தனர். இதற்கு முறையான விளக்கம் அளிக்கும்படி, யதீந்த்ர ப்ரவண சபைத் தலைவர் கே.எஸ்.சம்பத்குமார் கோரிக்கை வைத்திருக்கிறார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X