தொழிலாளி மகளின் படிப்பு வறுமையால் கேள்விக்குறி

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
தஞ்சாவூர்:பேராவூரணி அருகே, பிளஸ் 2 தேர்வில், 572 மதிப்பெண் எடுத்து, அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி மகளின் மேல்படிப்பு, குடும்ப வறுமை காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, குருவிக்கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் திருகுமரன், 45; தேங்காய் உரிக்கும் தொழிலாளி.இவரது மனைவி குணவதி, 38, தென்னங்கீற்று முடைந்து விற்கிறார்.
தொழிலாளி மகளின் படிப்பு  வறுமையால் கேள்விக்குறி

தஞ்சாவூர்:பேராவூரணி அருகே, பிளஸ் 2 தேர்வில், 572 மதிப்பெண் எடுத்து, அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி மகளின் மேல்படிப்பு, குடும்ப வறுமை காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, குருவிக்கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் திருகுமரன், 45; தேங்காய் உரிக்கும் தொழிலாளி.இவரது மனைவி குணவதி, 38, தென்னங்கீற்று முடைந்து விற்கிறார். இவர்களது மகள் அச்சுதா, 17. பிளஸ் 2 முடித்து விட்டார். மகன் ஹரிஹரன், 9; நான்காம் வகுப்பு படிக்கிறார்.அங்குள்ள தென்னந்தோப்பில், குடிசையில் வசித்து வரும் அச்சுதா, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 600க்கு, 572 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் முதலிடம் பெற்றார்.
இவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 395 மதிப்பெண் எடுத்திருந்தார். வேளாண்மையில் பட்டம் படிக்க விரும்பும் மாணவி, குடும்ப வறுமை காரணமாக, மேற்படிப்பை தொடர முடியுமா என்ற கேள்விகுறியுடன் தவித்து வருகிறார்.அச்சுதா கூறியதாவது:கால்நடை மருத்துவம், வேளாண்மை பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எனக்கு, அரசு ஒதுக்கீடில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், என் பெற்றோர், மேற்படிப்புக்கு தேவையான செலவை செய்ய முடியாத சூழலில் உள்ளனர். அரசு உதவி செய்தால், நான் விரும்பிய மேற்படிப்பு படிக்க முடியும். இல்லாவிட்டால், ஏதேனும் கூலி வேலைக்கு தான் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இம்மாணவிக்கு உதவி செய்ய விரும்புவோர், 63797 14905 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V K - NJ ,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202200:21:17 IST Report Abuse
V K . என்னுடைய மகச் சீறிய தன்னலமற்ற தோழர்கள் குழு வேண்டிய உதவி செய்ய தொடர்பு கொண்டுள்ளனர். By Sri Krishna's grace, this bright student Achyuta will be taken care.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-ஜூன்-202210:42:09 IST Report Abuse
அசோக்ராஜ் //"மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எனக்கு"// பள்ளி கல்லூரி தங்கும் விடுதி புத்தகம் லேப்டாப் சைக்கிள் எல்லாமே இலவசம்தானே? இன்னும் என்ன எதிர் பார்க்கிறார்கள்? மாசம் ஆயிரம் ரூபாய் வேறு தொடங்கியாச்சு.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
29-ஜூன்-202210:36:24 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நல்லதே நடக்கும். தேங்காய் உரிக்கும் கூலி தினமும் 1000 க்கு மேல். வேலை இல்லை என்றால் காங்கயம் வரட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X