பொது செய்தி

தமிழ்நாடு

வேல்முருகனுக்கு "கை கொடுக்கும் கை'

Added : செப் 05, 2011 | கருத்துகள் (4)
Advertisement
வேல்முருகனுக்கு "கை கொடுக்கும் கை'

மதுரை:பிஞ்சு கைகளை ஊன்றி, தவழ்ந்து, நடை பழகும் அனுபவம் வேல்முருகனுக்கு கிடைக்கவில்லை. பிறக்கும்போதே பிஞ்சு விரல்களை பறிகொடுத்துவிட்டு, தன்னம்பிக்"கை'யுடன் பிறந்த இந்த 30 வயது பிரம்மச்சாரி, வீட்டில் முடங்கி கிடக்கவில்லை. ஊனம் என்று தன்னை கேலி செய்ய காரணமாக இருந்த கைகளை கொண்டே இன்று எழுதி வருவாய் ஈட்டுகிறார்.


மதுரை தேனூர் அருகே தச்சம்பத்தைச் சேர்ந்த இவர், 9ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கைகளை நம்பி உழைக்க தயாராக இருந்த இவருக்கு, அதுவே இடையூறாக குறுக்கிட்டது. யாரும் இவரது கைகளை நம்பி வேலை தர தயாராக இல்லை.வயிற்றுப் பசியை போக்க வருமானம் வேண்டுமே? அதுக்காக வேல்முருகன் பிச்சை எடுக்கவில்லை. எது தனக்கு வேலை தர இடையூறாக இருந்ததோ, அந்த கைகளை கொண்டே உழைக்க முடிவு செய்தார். விரல்கள் இல்லாத இரு கைகளை இணைத்து எழுதி பழகினார்.


இன்று... மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இவர் "கை'ப்படாத மனுக்கள் இல்லை. பத்து ரூபாய் பெற்று கோரிக்கை மனு எழுதி கொடுத்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.


அவர் கூறுகையில், ""நானும் பலரிடம் வேலை கேட்டுவிட்டேன். எனது குறையை காரணமாக வைத்து யாரும் தரவில்லை. அதுக்காக வீட்டில் முடங்கி கிடக்கவும் எனக்கு மனமில்லை. அதனால் எழுதி வருவாய் ஈட்டுகிறேன். யாராவது, "கிளார்க்' வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். அதுவரை இந்த "எழுத்து' தொழில்தான் எனது வாழ்க்கை,'' என்றார்.


தன்னம்பிக்கையுடன் உழைக்க காத்திருக்கும் இவருக்கு, வேலை கொடுக்க விரும்பினால், 83443 48135ல் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
violet, karur - karur,இந்தியா
06-செப்-201115:04:30 IST Report Abuse
violet, karur நன்றி தினமலர் செய்திக்கு. வாசகர்களை இப்படியாக தன்னம்பிக்கை வளர எடுத்து காட்டியதற்கு. வேல்முருகன் ஆண்டவர் உன்னை ஆசிர்வதிப்பார். உன்னை மேன்மேலும் உயர்த்துவார். .
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-செப்-201109:47:45 IST Report Abuse
kumaresan.m உங்களை கண்டு நான் வியக்கிறேன் ,இவர் தன் நம்பிக்கையின் சின்னம் ,தமிழ் நாட்டின் சிறந்த கலக்டர் என்று பெயர் எடுத்த திரு ,சகாயம் அவர்கள் அரசுக்கு இவரின் பெயரை பரிந்துரை செய்யவேண்டும் ,,,
Rate this:
Share this comment
Cancel
Gokulachandran - Tiruppur,இந்தியா
06-செப்-201107:12:59 IST Report Abuse
Gokulachandran மதுரை கலெக்டர் இந்த மாற்று திரனளியை கண்டு கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X