மதுரை : ""புற்றுநோய் ஏற்படுவதற்கு மலச்சிக்கலும் ஒரு காரணம்,'' என, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மயில்வாகனன், சித்ரா, சிவலிங்கம், கோபிநாத் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஆசன வாய்ப் பகுதியில் வலியுடன் ரத்தம் வந்தால் அது மூலநோயாக இருக்குமென நினைக்கின்றனர். கவனிக்காதபட்சத்தில் அது புற்றுநோயாக கூட இருக்கலாம். சிலநேரங்களில் மலச்சிக்கல் புற்றுநோய்க்கு கூட காரணமாக அமையும். மதுரை அரசு மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆசனக்குடலில் புற்றுநோய் இருந்தால் அறுவை சிகிச்சை செய்வதுடன், செயற்கை ஆசனக்குடலை பொருத்தலாம்.
இதுகுறித்த தேசிய கருத்தரங்கு நாளை முதல் செப்.11 வரை, இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் நடக்கிறது. செப்.,10 ல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமையில் நேரடி அறுவை சிகிச்சை முறை விளக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்றனர்.