எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை: சொல்கிறார் வைகோ

Updated : செப் 08, 2011 | Added : செப் 07, 2011 | கருத்துகள் (119) | |
Advertisement
தூத்துக்குடி:""உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை,'' என, அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தில், கட்சி நிர்வாகி இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்ட வைகோ கூறியதாவது: நெல்லையில் ம.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின் 103வது பிறந்த நாள் விழா
MDMK, Vaiko, வைகோ, ம.தி.மு.க.,

தூத்துக்குடி:""உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை,'' என, அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தில், கட்சி நிர்வாகி இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்ட வைகோ கூறியதாவது: நெல்லையில் ம.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின் 103வது பிறந்த நாள் விழா மாநாடு, செப்.,15ம் தேதி நடக்கிறது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, பார்லியில் முதல் குரல்கொடுத்தது நான் தான்.உலகில் ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அணு உலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள், மீனவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ம.தி.மு.க., ஆதரவு தெரிவிக்கிறது. இந்த அணுமின் நிலையத்தில் சிறு அளவு ஆபத்து ஏற்பட்டாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.


உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை. எனவே, உள்ளாட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை தர, எங்கள் கட்சியினரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் போட்டி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. டில்லி ஐகோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு பலர் பலியாகியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே, எங்களது கட்சியின் நிலைப்பாடு.இவ்வாறு வைகோ கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (119)

Che Guevara - Londan,யுனைடெட் கிங்டம்
09-செப்-201101:06:00 IST Report Abuse
Che Guevara வைகோவிற்கு எதிராக எழுதியவர்கள் தயவு செய்து படிங்கள்.... திருந்துகிறீர்களா என்று பாப்போம்.... வை.கோ எங்களுடைய தலைவர் -பாகம் 1 வை.கோ என்னுடய தலைவர். ஆனால் இன்று எங்களுக்கு ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகள்? தோல்விகள்? தகுதியான வை.கோ அவர்கள் முன்னணி தலைவராய் தமிழகத்தில் ஆக முடியாமல் போனதற்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன் பாருங்கள். 1. "மனைவி1/மனைவி2/துணைவி என்கிற இல்லறம் இல்லாதது. 2. வாரிசு அரசியல் செய்ய துணியாதது. 3. 18 ஆண்டுகள் டெல்லியில் இருந்தும் ஊழல் செய்யாமல் இருந்தது. 4. உலகில் எங்கெல்லாம் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அவனுக்காக குரலெழுப்பி போராடியது. 5. தன் அரசியல் வாழ்வையே ஈழத்து சொந்தங்களுக்காக இழந்து நிற்பது. 6. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்களின் வாழ்வுரிமையை காக்க 18 ஆண்டுகள் போராடி வென்றது. 7. முல்லை பெரியாறு உரிமையை நிலைநாட்ட முன்னின்று போராடுவது. 8. 65000 சிறுவர் சிறுமியர்க்கு தன் சொந்த உழைப்பில் சேர்த்த பணத்தில் மஞ்சள் காமாலை தொடர் முகாம் சிகிச்சை அளித்து அவர்களை காத்தது. 9. சேது சமுத்திர திட்டத்தை வாஜ்பாய் அவர்கள் மூலமாய் சென்னை தீவுதிடலில் அறிவிக்க வைத்தது. 10. வி.பி.சிங் "வை.கோ"_விற்கு மத்திய மந்திரி பதவி தருகிறேன் என்ற போது அதை மு.க நயவஞ்சகமாய் தன் மருமகன் மாறனுக்கு திருப்பி விட்ட போதும் விசுவாசத்தின் பொருட்டு அமைதி காத்தது. 11. "வை.கோ என் மூத்த மகன்" என்று பெருமையுடன் சொல்லி நிதி/ராணுவம் தவிர்த்து உனக்கு எந்த இலாகா வேண்டுமோ அதை நீ எடுத்து கொள்ளலாம் என்று வாஜ்பாய் சொன்ன போதும் தன் சகாக்களுக்கு வழிவிட்டு தன்னை பதவிக்கு முன்னிறுத்தி கொள்ளாதது. 12. 2004_ல் 4 நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமே தருவேன் என்று மு.க தன் சுயரூபம் காட்டிய போது அதனால் என்ன "நான் நிற்கவில்லை" என் சகாக்கள் நிற்கட்டும் என்று 4 சகாக்களை நிற்கவைத்து வெல்ல வைத்தது. 13. 2004_ல் தன் 4 உறுப்பினர்களையும் கூட்டி கணக்கு காண்பித்து கருணாநிதி 9 அமைச்சர் பதவிகளை வாங்கி தில்லுமுல்லு செய்ததை சோனியாவும் மன்மோகன் சிங்கும் சொல்லிய பிறகும் அமைதியாக இருந்தது. 14. 2006_ல் இன்றைக்கு எங்களுக்கு ஏற்பட்ட நிலையை அன்றைக்கு கருணாநிதி ஏற்படுத்தினார். வாருங்கள் போகலாம் இல்லையென்றால் நாங்கள் அங்கே(ஜெவிடம்) போகிறோம் என்று நிர்பந்தப்படுத்தி அதிமுக கூட்டணியை தேர்தெடுக்க வைத்த சில தறுதலைகளின் பேச்சை செவிமடுத்தது. வை.கோ எங்களுடைய தலைவர் -பாகம் 2 16. 2010_நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்பு அணி மாறி 7 தொகுதியும் ஒரு ராஜ்சபா உறுப்பினர் என்று ஒப்பந்தமும் போட்டுவிட்டு தேர்தலில் தோற்றவுடன் ஒட்டளித்த மை அழியும் முன்பே ஜாகையை மாற்றிய கேவல பச்சோந்தித்தன் இல்லாமை. 17. தேர்தலுக்கென தனி வேடம் தரிக்க தன் அலமாரியில் தனிஉடை வைத்திருக்கும் கேடுகெட்ட தலைவர்களுக்கு போல் நடிக்க தெரியாதது. 18. பிச்சாதிபதியாய் அரசியல் தொடங்கி உலக பணக்கார வரிசைக்கு வரும் தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகளை போல் இருக்காமல் பிறவி கோடீஸ்வரானாய் பிறந்து அந்நிலையிலேயே கைசுத்தமாய் வாழ்வது. 19. எத்தனை குற்றம் சுமத்தப்பட்டாலும் ஊழல் குற்றம் சுமத்த வழிதராதது. 20. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிலேயே இதுவரையில் என்னிடம் தனக்கென எதையும் கேட்காமல் தன் மாநில மக்களுக்காக மட்டுமே கேட்கும் கொள்கைக்காக வாழும் தலைவர் வை.கோ என்று மன்மோகன் சிங் சொன்னது. 21. வாக்களித்தால் மக்களை வாழ்த்துவதும் தோற்க வைத்தால் மக்களை முட்டாள்கள் என்று தூற்றுவதையுமே பிறவிக்குணமாய் கொண்ட சண்டாள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் தோற்க வைத்த மக்களுக்காகவும் போராடும் தலைவன். 22.நதி நீர் இனைப்பை வலியுருதி நாடாலுமன்ட்ரதில் தனி நபர மசோதா கொன்டு வந்தது 23.May 1 day declared as holiday by central govt during VP singh period because of vaiko request. இதை போல் இன்னும் நூறு காரணங்கள் என்னால் பட்டியலிட முடியும்.., வை.கோ_விற்கு தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த தெரியவில்லை என்று இங்கே பலர் விமர்சிப்பதுண்டு. என்ன செய்வது என் தலைவனுக்கு அரசியல் விளையாட்டாகவோ சூதாட்டமாகவோ தெரியவில்லை மாறாக அவருக்கு அரசியல் ஒரு நெறிமுறையான ஜனநாயக சேவையாக தெரிகிறது. ஒரு வேளை சூத்திரதாரிகளும் சூன்யகாரர்களும் துரோகிகளும் சதியாளர்களும் மட்டுமே இங்கே வெல்ல முடியும் என்று ஏதேனும் எழுதப்படாத இழி நெறி உள்ளதோ என்னவோ..? இங்கே நல்ல அரசியல்வாதி அவனுடைய "மக்கள் பணியால்" அங்கீகரிக்கப்படுவதை விட "தேர்தல் வெற்றியால்" மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறான்.., விளாத்தி குளத்தில் வை.கோ_வை வீழ்த்தியவன் "பின்னாளில் கொள்ளைக்காரனாய்" மாறினான். இங்கே தோல்வி வை.கோ_விற்கு அல்ல அந்த கொள்ளைக்காரனுக்கு வாக்களித்த மக்களுக்கே.., Sep 6 (3 days ago) Raj வை.கோ எங்களுடைய தலைவர் -பாகம் 3 இது போன்ற தோல்வி இன்னும் 10 வருமென்றால் அவற்றையும் தாங்கி கொள்ளும் பக்குவம் உள்ள தொண்டர்கள் இன்னும் வை.கோவுடன் இருக்கிறோம்.., நாங்கள் அவருடன் இருப்பது "அதிகாரம்" சுவைக்க அல்ல "இன உணர்வு" காத்திட போராடும் அவனின் வளையா குணத்திற்காக.., ஆம்.., தீ கதிரை எப்படி ஏந்தி பிடித்தாலும் அது மேல் நோக்கி தானே எறியும்.., நாங்கள் மேல் நோக்கியே எறிகிறோம்.., தேங்கி நிற்க நாங்கள் ஒன்றும் குட்டை அல்ல.., 17 ஆண்டுகளாய் ஒடுகிறோம்.., வெற்றியின் அளவு குறைந்திருக்கலாம் ஆனால் வை.கோ_வின் மக்களுக்கான போராட்டத்தின் வீச்சு குறையவில்லை என்பதை மனசாட்சியுள்ளோர் ஏற்று கொள்வர்.., இம்மண்ணில் வீரனால் எதிரியை எளிதாய் வீழ்த்திட இயலும் ஆனால் அவ்வளவு எளிதாய் துரோகத்தை வீழ்த்திட முடியாது காரணம் எதிரி கண்ணுக்கு தெரிவதுண்டு ஆனால் துரோகம் உருவமில்லாதது.., எங்களுக்கான களம் எப்போதும் உண்டு.., அக்களத்தில் நாங்கள் இறங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்.., நன்றி raj அவர்களுக்கு.....
Rate this:
Cancel
thamilan - daho,கத்தார்
09-செப்-201100:40:06 IST Report Abuse
thamilan பகல் வேஷம் வைகோ அவர்களே, சேது சமுத்திர திட்டம் வேண்டும் என்று சுமார் 30 ஆண்டுகளாக போராடினீர்கள். பிறகு அம்மாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கருணாநிதி கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து குட்டிசுவர் ஆகிட்டே!! நீ ஒரு துரோகி!!
Rate this:
Cancel
தமிழன் - சென்னை,இந்தியா
08-செப்-201122:25:24 IST Report Abuse
தமிழன் நான் மதிமுக அல்ல. காசும், மாசும் தேவையில்லை. நீங்கள், ஒரு தன்னலமற்ற சிறந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர். உங்கள் புகழ், உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X