உலக கோப்பையில் அதிர்ச்சி: பிரேசில் "அவுட்' : அரையிறுதியில் நெதர்லாந்து

Updated : ஜூலை 03, 2010 | Added : ஜூலை 02, 2010 | கருத்துகள் (5)
Share
Advertisement
உலக கோப்பை,கால்பந்து,பிரேசில்,அரையிறுதி,நெதர்லாந்து

போர்ட் எலிசபெத் : உலக கோப்பை கால்பந்து தொடரில் மிகப்பெரும் அதிர்ச்சி. பரபரப்பான காலிறுதி போட்டியில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற, பிரேசில் அணி பரிதாப தோல்வியடைந்து வெளியேறியது. பிலிப் மெலோ "சேம்-சைடு' கோல் அடித்தது மற்றும் "ரெட் கார்டு' பெற்றது போன்றவை, பிரேசில் அணியின் கோப்பை கனவை தகர்த்தது. அபார வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி, நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் காலிறுதி போட்டிகள் நேற்று துவங்கின. போர்ட் எலிசபெத்தில் நடந்த முதல் போட்டியில் உலகின் "நம்பர்-1' அணியான பிரேசில், நெதர்லாந்தை சந்தித்தது.


அசத்தல் கோல்: போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் (8வது நிமிடம்) ரொபினியோ பந்தை கோல் போஸ்டுக்குள் அடித்தார். ஆனால் இது "ஆப்-சைடு' கோலாக அமைந்தது. இருப்பினும் பிரேசில் வீரர்கள் மனம் தளரவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாத ரொபினியோ, "சூப்பர்' கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.


முரட்டு ஆட்டம்: இதற்கு பதிலடி தருவதற்கு பதில், நெதர்லாந்து அணியினர் முரட்டு ஆட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். இந்த அணியின் ஹெட்டிங்கா, வான் டர் வெய்ல் ஆகியோருக்கு நடுவர் "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், பிரேசில் முதல் பாதியில் 1-0 என முன்னிலை வகித்தது.


"சேம் சைடு' கோல்: இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள், எழுச்சி பெற்றனர். போட்டியின் 53 வது நிமிடத்தில் நெதர்லாந்தின் அர்ஜென் ராபென் அடித்த பந்தை, கோல் போஸ்ட்டை நோக்கி ஸ்னைடர் அடித்தார். ஆனால் அங்கிருந்த பிரேசில் கோல் கீப்பர் ஜூலியோ சீசர், பந்தை பிடிக்கத் தவறினார். மாறாக, பெலிப் மெலோவின் தலையில் பட்டு, "சேம் சைடு' கோலாக மாறியது.


நெதர்லாந்து முன்னிலை: தொடர்ந்து அசத்திய நெதர்லாந்து அணிக்கு 68வது நிமிடத்தில் "கார்னர்-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை அர்ஜென் ராபென், பிரேசில் கோல் ஏரியாவுக்குள் அடித்தார். அங்கிருந்த நெதர்லாந்தின் குயிட் தலையால் முட்ட, தொடர்ந்து அருகில் இருந்த ஸ்னைடரும், தலையில் முட்டி கோலாக மாற்றினார். இதையடுத்து நெதர்லாந்து அணியினர் பக்கம் ஆட்டம் திரும்பியது.


பலம் குறைந்தது: இந்நிலையில் போட்டியின் 73வது நிமிடத்தில், நெதர்லாந்தின் ஸ்னைடரை, "சேம் சைடு' கோல் அடித்த பிலிப் மெலோ, கீழே தள்ளிவிட்டு மிதித்தார். இதையடுத்து நடுவர் உடனடியாக "ரெட் கார்டு' காட்டி வெளியேற்றினார். இதனால் பிரேசில் அணி 10 வீரர்களுடன் போராட வேண்டியதாயிற்று. ஸ்கோரை சமன் செய்ய பிரேசில் வீரர்கள் எடுத்த முயற்சி வீணானது. இறுதியில் பிரேசில் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது. அபார வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி நான்காவது முறையாக, அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. இம்முறை ரொனால்டினோ, அட்ரியானோ போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை, பயிற்சியாளர் துங்கா அணியில் சேர்க்காதது, பிரேசில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


நான்காவது முறை: நெதர்லாந்து அணி கடைசியாக பங்கேற்ற 23 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்து வந்தது. இதில் கடைசி 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்த அணி, நேற்று பிரேசிலை வெளியேற்றி, தனது 13வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நான்காவது (1974, 78, 98) முறையாக, அரையிறுதிக்கு முன்னேறியது.


கோல் கீப்பர் தவறு: சமீபத்தில் நடந்த அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில், இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர், பந்தை சரியாக தடுக்காமல் விட்டு, அணியின் வெற்றியை தடுத்தார். நேற்றும் இது போல பிரேசில் கோல் கீப்பர் ஜூலியோ சீசர், பந்தை பிடிக்காமல் விட, சக வீரர் "சேம் சைடு' கோல் அடிக்க காரணமாக இருந்தார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெங்கட் - detroit,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-201020:35:46 IST Report Abuse
வெங்கட் டட்ச் விளையாட்டு கலக்கல்.
Rate this:
Cancel
அய்யன் - irinjalakuda,இந்தியா
03-ஜூலை-201017:39:35 IST Report Abuse
அய்யன் போச்சு எல்லாமே போச்சு. பிரேசில் நல்ல விளையாடியும் ஜெய்க்க முடியலே பாவம்
Rate this:
Cancel
yuvaraj - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-201010:57:37 IST Report Abuse
yuvaraj யானைக்கும் அடி சறுக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X