பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை: கொந்தளிப்பு

Updated : மே 22, 2010 | Added : மே 20, 2010 | கருத்துகள் (1)
Advertisement
அறநிலையத்துறை விழாவில் செம்மொழி முத்திரை

சேலம்: "சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்த தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில், பாரம்பரியமிக்க அரசு முத்திரையை பயன்படுத்தாமல், செம்மொழி மாநாட்டுக்கான முத்திரையை இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்தி உள்ளது. முத்திரையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது' என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.


சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா 16ம் தேதி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பண் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் அரசு முத்திரைக்கு பதில், செம்மொழி மாநாட்டு முத்திரை இடம் பெற்றிருந்தது. கடந்த 1946 முதல் தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. கூட்டணி கட்சியினரும், "ஒரு மதத்தை சார்ந்தவாறு முத்திரை இருப்பதால், செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் உருவம் கொண்ட முத்திரையை இனி அரசின் முத்திரையாக பயன்படுத்தலாம்' என, கூறி வருகின்றனர். அதை நிறைவேற்றும் பொருட்டே அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் செம்மொழி முத்திரை ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


இந்நிலையில், "அரசு முத்திரையை மாற்றாக பயன்படுத்தி, மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்' என, கூறி சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதி பழனிசாமி, உதவி ஆணையர் வரதராஜன், அறங்காவலர்கள் சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. "தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என, அக்கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் கூறினார்.


பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தின் அரசு முத்திரையாக கோபுர சின்னம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தான் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. செம்மொழி மாநாட்டு முத்திரையை அனைத்து தரப்பிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. சுகவனேஸ்வரர் கோவில் தங்கரத விழாவில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செம்மொழி மாநாட்டு முத்திரையே அதிகம் இடம் பெற்றுள்ளது. அரசு விழாக்களிலும், வாகனங்களிலும் மறைமுகமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ஜோதி பழனிசாமி கூறியதாவது: இது தமிழ்நாடு, பாகிஸ்தான் அல்ல. எந்த முத்திரையையும் நாங்கள் பயன்படுத்துவோம். கோவில் விழா தானே தவிர அரசு விழா அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இதுபோன்று செய்து வருகின்றனர். செம்மொழி முத்திரைக்கு அரசு அங்கீகாரம் உள்ளது. கோவில் தங்கரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதை பாராட்டாமல் இதுபோன்று தேவையில்லாதவற்றை கூறி வருகின்றனர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். வழக்கு போட்டாலும் அதை சந்திப்பேன். உதவி ஆணையர் வரதராஜனை தொடர்பு கொண்டபோது, ""தங்கரத விழா அரசு சார்ந்தது. செம்மொழி முத்திரையை உபயதாரர்கள் வழங்கியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் வாருங்கள்,'' என, கூறி முடித்துக் கொண்டார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிங்கம் - salem,இந்தியா
25-மே-201013:13:03 IST Report Abuse
 சிங்கம் நீ எந்த முத்திரை கொடுத்தல் என்ன .. உன் முகத்திரை கிழியும் நேரம் வெகு விரைவில் ...
Rate this:
Share this comment
Cancel
கே.வரதராஜன் - chennaiannanagar,இந்தியா
24-மே-201016:13:52 IST Report Abuse
 கே.வரதராஜன் மைனாரிட்டி தி மு க அரசு ஹிந்துக்கள் மனம் புண்படும் படியாக எதாவது செய்து கொண்டே தான் இருக்கும்.அரசு அதிகாரிகளும் அதுக்கு துணை.அரசு எந்திரமே தி மு க போல் தான் செயல் படுகிறது.ஹிந்துக்கள் விழித்து எழ வேண்டும்.இல்லையேல் நாம் தான் மைனாரிடிகள் ஆகி விடுவோம்.
Rate this:
Share this comment
Cancel
John - chennai,இந்தியா
22-மே-201000:44:24 IST Report Abuse
 John Whats big deal if gvt wants to use common logo....I understand if gvt use logo which is against specific religion...Whats wrong using Thiruvalluvar....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X