ஹிந்துக்கள் தொடர்பாக ஆ.ராஜா கருத்திற்கு திருமாவளவன் ஆதரவு

Updated : செப் 21, 2022 | Added : செப் 21, 2022 | கருத்துகள் (89) | |
Advertisement
அவனியாபுரம் : ஆ.ராஜா எம்.பி., மனுதர்மத்திலுள்ள செய்தியை எடுத்து மேற்கோள் காட்டி சொன்னார். சூத்திரன் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:இலங்கை கடற்படையால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்களை
Hindu, A Rasa, Thirumavalavan, மதுரை, ஹிந்து, ஆராஜா,  திருமாவளவன் , Madurai,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


அவனியாபுரம் : ஆ.ராஜா எம்.பி., மனுதர்மத்திலுள்ள செய்தியை எடுத்து மேற்கோள் காட்டி சொன்னார். சூத்திரன் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:இலங்கை கடற்படையால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களுடைய உடைமைகளை திரும்ப பெறுவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் இது குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.ராகுலின் யாத்திரை காங்கிரசிற்கு மட்டுமல்ல இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ஜனநாயக சக்திகளும் காங்கிரஸ் மீதும், ராகுல் மீதும் நம்பிக்கையோடு அணி திரள்வர். ஆ.ராஜா எம்.பி., மனுதர்மத்திலுள்ள செய்தியை எடுத்து மேற்கோள் காட்டி சொன்னார்.


latest tamil news


ஹிந்து என்று ஒத்துக் கொண்டால் சூத்திரன் என்று ஒத்துக் கொள்ள வேண்டி வரும். சூத்திரன் என்று ஒத்துக் கொண்டால் அதற்கு மனு தர்மம் என்ன பொருள் தருகிறதோ அதனை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே நான் ஹிந்து இல்லை என நீ ஏன் சொல்லவும் கூடாது என்று சூத்திரர்களை பார்த்து சூத்திரர்களாக இந்த சமூகம் அடையாளப்படுத்துபவர்களை பார்த்து சொன்னார். அது தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொருந்தாது. பிராமணர், சத்திரியர், வைசியர் என்பவர்களுக்கும் பொருந்தாது.

ஹிந்து சமூகத்தில் உள்ள நாலாம் வர்ணத்தைச் சார்ந்த சூத்திரர்களுக்கு அந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனென்றால் அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்கிறது சூத்திரர் என்றால் அப்பன் பெயர் தெரியாதவர்கள், வேசி பிள்ளைகள். இதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார். சூத்திரன் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது ,என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202220:47:37 IST Report Abuse
kulandai kannan வேலிக்கு ஓணான் சாட்சி
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
22-செப்-202217:15:34 IST Report Abuse
Neutralliteஓணான கேவலப்படுத்தாதீங்க சார்......
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-202220:24:46 IST Report Abuse
ram இனம் இனத்தோடதானே சேரும்.
Rate this:
Cancel
21-செப்-202217:07:53 IST Report Abuse
PV, முத்தூர் லோக்சபா தேர்தலில் தோல்வி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X